பொள்ளாச்சி அருகே வேலைக்கு சேர்ந்த முதல் நாளே 8 சவரன் நகை திருட்டு - இளம்பெண்ணுக்கு போலீசார் வலை

பொள்ளாச்சி அருகேயுள்ள பாலகோபாலபுரத்தை சேர்ந்த ஆகாஷ் என்பவர் நகைக் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வேலை கேட்டு வந்த கீர்த்தி என்ற இளம்பெண்ணை வேலைக்குச் சேர்த்த நிலையில், 8 பவுன் நகையுடன் மாயமாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: பொள்ளாச்சி அருகே வேலைக்குச் சேர்ந்த முதல்நாளே நகை கடையில் கைவரிசை காட்டிய இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பாலகோபாலபுரம் வீதியைச் சேர்ந்தவர் ஆகாஷ் (27). இவர் அந்த பகுதியில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடைக்கு கீர்த்தி (27) என்ற இளம்பெண் வேலை கேட்டு வந்தார்.

அவரிடம் கடையின் உரிமையாளர் அடையாள அட்டை கொடுக்கும்படி கேட்டார். அதற்கு அந்த இளம்பெண் நாளை தருவதாக கூறினார்.

இதனையடுத்து இளம் பெண்ணை ஆகாஷ் தனது நகைக்கடையில் வேலைக்குச் சேர்த்தார். இரவு 8 மணியளவில் கீர்த்தி திடீரென மாயமானார். அவரை கடை உரிமையாளர் தேடினார். அப்போது அவர் கடையில் இருந்த 8 பவுன் தங்க நகைகளை திருடித் தப்பிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து நகைக்கடை உரிமையாளர் ஆகாஷ் பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே நகைக்கடையில் 8 பவுன் தங்க செயினை திருடி மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (22.09.2026) மின்தடை

கோவை ஆர்.எஸ்.புரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக 22.09.2026 அன்று காலை 9 மணி முதல் மாலை...