மல்யுத்த சம்மேளன தலைவர் பதவி விலக கோரி கோவையில் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்!

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிட்ஜ் பூசன் சரன் சிங் மீது குற்றம்சாட்டி வீராங்கனைகள் 17 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி கோவையில் ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: பாலியல் குற்றசாட்டுக்கு ஆளாகியுள்ள மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிட்ஜ் பூசன் சரன் சிங் ராஜினாமா செய்ய வலியுறுத்தி கோவையில் ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய தேசத்திற்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி அதற்கு நீதிகேட்டு குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் கடந்த 17 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களது போராட்டத்தை நசுக்க மத்திய அரசு காவல்துறை மூலம் பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது.



இந்நிலையில், சம்பந்தப்பட்ட குற்றவாளி இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிட்ஜி பூசன் சரண் சிங் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோவை மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி கவுன்சில் சார்பில் மத்திய தந்தி அலுவலகம் முன்பு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏ.ஐ.டி.யு.சி மாநில செயலாளர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட கவுன்சில் பொதுச் செயலாளர் தங்கவேல், கோவை ஜில்லா மில் தொழிலாளர் சங்க செயலாளர் சிவசாமி, தமிழ்நாடு எ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் செல்வராஜ், கோவை மாவட்ட பொறியியல் பொது தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் செல்வராஜ், மாமன்ற உறுப்பினர்கள் சாந்தி சந்திரன், பிரபா ரவீந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...