காந்திபுரம் அருகே எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு - போலீசார் விசாரணை!

கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியாருக்கு சொந்தமான காலி இடத்தில் பெண் ஒருவரது சடலம் எரிந்த நிலையில், மீட்கப்பட்டது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த பெண் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: காந்திபுரம் அருகே எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியாருக்கு சொந்தமான காலி இடத்தில், சிறிய அறை உள்ள பகுதியில் பெண் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனைக் கண்ட பொது மக்கள் காட்டூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் எரிந்த நிலையிலிருந்த பெண்ணின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



மேலும் சம்பவ இடத்தில் தடயவியல் துறையின் ஆய்வு மேற்கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், இறந்த பெண் யார்? எதற்காக இங்கு வந்தார்? கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

முன்னதாக காந்திபுரம் பேருந்து நிலையம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...