மூன்றாம் தர அரசியல் செய்ய வேண்டாம்..! - ஆளுநருக்கு சபாநாயகர் அப்பாவு கோரிக்கை

இந்தியாவில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறது. மதசார்பற்ற நாடு என்பதை மதசார்புள்ள நாடுதான் என்பதை ஆளுநர்கள் பேசுவது, அரசியல் தலைவர்கள்போல் ஆளுங்கட்சிக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களை பரப்பி வருவதும், மாடல் அழிந்துவிட்டது என்பதுபோல செல்வதும் சரியாக இல்லை என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை மாவட்டம் சூலூரில் வர்த்தக சங்கம் சார்பில் இரண்டாம் ஆண்டு நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் சிறப்பு விருந்தினராக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:



கோவை மாவட்ட வணிகர் சங்க மாநாட்டிற்கு வருகை தந்தது மகிழ்ச்சியாக உள்ளது. அரசு வர்த்தகர்களை அழைத்து பேசி, நிதிநிலை அறிக்கை தயார் செய்து அதன்படி அவர்களுக்கு உதவி செய்து வருகிறது.

ஏற்கனவே வேளாண்மைக்கு செஸ்வரி போட்டு திரும்ப பெறப்பட்டது. 10 சதவீதம் மின் கட்டண சலுகை வழங்கியதும் இந்த அரசுதான். ஒரு லட்சம் ரூபாயாக இருந்த இழப்பீட்டுத் தொகையை மூன்று லட்சம் ரூபாயாக உயர்த்தியது திமுக அரசுதான்.

ஆளுநர்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி பணியாற்ற வேண்டியவர்கள். அதிலிருந்து தவறாமல் பணியாற்றினால் நன்றாக இருக்கும். மதசார்பற்ற நாடு இந்தியா. இந்தியாவில் சட்டத்தின் ஆட்சிதான் நடைபெறுகிறது. மதசார்பற்ற நாடு என்பதை மதசார்புள்ள நாடுதான் என்பதை ஆளுநர்கள் பேசுவது, அரசியல் தலைவர்கள்போல் ஆளுங்கட்சிக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களை பரப்பி வருவதும், மாடல் அழிந்துவிட்டது என்பதுபோல செல்வதும் சரியாக இல்லை.

இந்தியாவில் மக்களாட்சி தத்துவம்தான் சிறந்தது. அரசியலமைப்புச் சட்டம்தான் சிறந்தது. மக்களாட்சி சட்டம்தான் நடைபெறுகிறது. இதனைத் தெரிந்து சொல்கிறார்களா? தெரியாமல் சொல்கிறார்களா? என்று தெரியவில்லை.

வெடிவிபத்து தொடர்பாக விரைவான நடவடிக்கை தமிழக அரசு எடுத்தது. இது தொடர்பாக உள்துறை மற்றும் பிரதமர், குடியரசு தலைவர்களை சந்தித்து புகார் தெரிவிக்காமல் நான்காம்தர அரசியலை ஆளுநர் செய்கிறார். சட்டத்துக்கு புறம்பாக பேசி மூன்றாம் தர அரசியல் ஆளுநர் செய்ய வேண்டாம்.

இந்தியாவில் ஓபிசிக்கு கொடுக்கக்கூடிய மருத்துவ படிப்பில், இட ஒதுக்கீடு இந்தியாவிற்கு பெற்றுத் தந்தது திராவிட அரசுதான். ஆளுங்கட்சியைவிட எதிர்க்கட்சி இருந்தால் அதிக அளவில் வாய்ப்பு கொடுக்கிறோம். தமிழ்நாட்டில் மட்டும் இருந்த திராவிட மாடல் இந்தியா முழுவதும் சென்று உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...