யானைகள் சேதப்படுத்தும் பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கப்படும்..! - அமைச்சர் மதிவேந்தன் தகவல்

ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகத்திற்கு உட்பட்ட டாப்சிலிப் கோழிக்கமுத்தியில் யானைகள் முகாமில் 26 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றது. இந்த யானை முகாமை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்தார். அப்போது பேசிய அவர், யானைகள் சேதப்படுத்தும் விவசாய பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.


கோவை: டாப்சிலிப் கோழிக்கமுத்தி யானைகள் முகாமை தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேரில் ஆய்வு செய்தார்.

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகத்திற்கு உட்பட்ட டாப்சிலிப் கோழிக்கமுத்தியில் யானைகள் முகாமில் வனத்துறையினரால் 26 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.



இன்று யானைகள் முகாமை தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது யானைகள் முகாம் மற்றும் யானைகளுக்கு உணவு தயாரிக்கப்படும் இடங்களையும் ஆய்வு செய்தார்.



மேலும் யானை பாகங்களிடம் நலம் விசாரித்து அவர்களது குறைகளை கேட்டு கேட்டறிந்து நிவர்த்தி செய்யப்படும் என உறுதியளித்தார்.



தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானைகளை பிடிப்பதற்கு உதவியாக இருந்த கும்கி யானை பாகன்களை அமைச்சர் மதிவேந்தன் பாராட்டினார்.



பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:



வனப்பகுதியை ஒட்டி உள்ள விவசாய நிலங்களில் யானைகளுக்கு பிடித்த கரும்பு, வாழை போன்ற பயிர்களை விவசாயிகள் பயிரிடுவதை தவிர்க்க வேண்டும். வனப்பகுதியில் ஒட்டி உள்ள விவசாய நிலங்களுக்கு வனவிலங்குகள் வருவதை முழுமையாக தடுக்க இயலாது.பயிர்கள், விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் கடந்த காலங்களில் இல்லாத வகையில் முதல்வர் தற்போது ஆண்டுக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்.

பயிர் சேதம் ஏற்பட்டால் உடனடியாக நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. யானைகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு பிரச்னைகளை கையாண்டு வருகிறது. வன கால்நடை மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது. இருப்பினும் தற்போது உள்ள மருத்துவர்களை கொண்டு யானைகளுக்கு ஏற்படும் தொற்று நோய் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு உரிய சிகிச்சை அளித்து காப்பாற்றப்பட்டு உடனடி நிவாரணம் அளிக்கப்பட்டு வருகிறது.

வன கால்நடை மருத்துவர்கள் நியமனம் குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநரும் கோவை மண்டல தலைமை வன பாதுகாவலருமான ராமசுப்பிரமணியம் , துணை இயக்குநர் பார்க்கவ் தேஜா, உதவி வன பாதுகாவலர் செல்வம் மற்றும் உலாந்தி வனச்சரகர் சுந்தரவேல் உடன் இருந்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...