தாராபுரத்தில் காடு ஹனுமந்தராயர் சுவாமி கோவில் தேர்திருவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

தாராபுரத்தில் காடு ஹனுமந்தராயர் சுவாமி கோவில் தேரோட்டம் காலை 9 மணிக்கு தொடங்கியது. பக்தர்கள் கலந்துகொண்டு, பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.முக்கிய வீதிகளின் வழியாக சென்ற தேர் கல்யாணராமர் கோவில் வீதியில் பகல் 12 மணிக்கு நிலைநிறுத்தப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள காடு அனுமந்தராய சாமி கோவில் பகுதி 700 ஆண்டுகளுக்கு முன் வனப்பகுதியாக இருந்தது.

அப்போது, தாராபுரத்தில் வியாசராயர் சாமிகள் இந்தியா முழுவதும் 732 ஆஞ்ச நேயமூர்த்திகளை பிரதிஷ்டை செய்து இருந்தார். அதில் 89-வது மூர்த்தியே தாராபுரம் ஆஞ்சநேயர்.



பொதுவாக சீதா, ராமர் கோவில்களில் மூலமூர்த்தியாக சீதா, ராமர் இருக்க உற்சவமூர்த்தியாக ஆஞ்சநேயர் இருப்பது வழக்கம். ஆனால், தாராபுரத்தில் 7 அடி உயரத்தில் மூலமூர்த்தியாக ஆஞ்சநேயர் வீற்றிருக்க உற்சவ மூர்த்திகளாக சீதா, ராமர் வீற்றிருப்பது தாராபுரம் ஆஞ்சநேயர் கோவிலின் தனி சிறப்பாகும்.



ஆஞ்சநேயர் வாயு என்ற காற்றின் வடிவில் இங்கு அருள்பாலிப்பதாக ஐதீகம். இதன் காரணமாக மூலஸ்தானத்தின் மேற்கூரையில் எப்போதும் காற்று உள்ளே நுழைந்து வெளியே செல்லும் வகையில் திறந்த நிலையிலேயே கோவில் இருப்பது இங்கு மட்டுமே.

இக்கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்து துளசி மாலை சாத்தி ஆஞ்சநேயப்பெருமானை உள்ளம் உருக வேண்டிக்கொண்டால் திருமணத்தடை உள்ளவர்களுக்கு விரைவில் திருமணமாகும் என்பது நம்பிக்கை.



தீராத உடல் பிணிகள் எதுவாக இருந்தாலும் அது குணமாகும் என்பதும் தனிச்சிறப்பு. இந்த கோவில் தேரோட்டம் காலை 9 மணிக்கு தொடங்கியது. இதில் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

முக்கிய வீதிகளின் வழியாக சென்ற தேர் கல்யாணராமர் கோவில் வீதியில் பகல் 12 மணிக்கு நிலைநிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...