பல்லடம் அருகே பங்காளி சண்டையில் 36 பனை மரங்கள் இரவோடு இரவாக தோண்டி வீசப்பட்ட அவலம்!

பல்லடம் அருகே கள்ளம்பாளையத்தில் பங்காளி சண்டையில் எந்தவித அனுமதியும் இன்றி 36 பனை மரங்கள் இரவோடு இரவாக வேரோடு தோண்டு வீசப்பட்டுள்ளன. பனை மரங்களை வேரோடு தோண்டி வீசிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி பாதிக்கப்பட்ட விவசாயி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.


திருப்பூர்: பல்லடம் அருகே பனைமரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டு கள்ளம்பாளையத்தை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி என்பவரது மனைவி மரகதம். மரகதத்தின் பெயரில் நாலரை ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. மரகதத்தின் மகன் வடிவேல் இந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இதில் சுமார் 80 ஆண்டுகள் பழமை வாய்ந்த 40 பனை மரங்களையும் வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் மரகதத்திற்கு சொந்தமான நிலத்திற்கு நடுவே அருகில் உள்ள அவரது அண்ணன் ஆறுமுகம் மற்றும் அவரது மகன்கள் பயன்படுத்தக்கூடிய பொது வழித்தடம் அமைந்துள்ளது.



இந்த பொது வழித்தடத்தை அகலப்படுத்துவதற்காக ஆறுமுகம் மற்றும் அவரது மகன்கள் சிவசங்கர் சுப்பிரமணி மற்றும் யுவராஜ் ஆகிய நான்கு பேரும் சேர்ந்து நேற்று இரவு 11 மணி அளவில் ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு 80 ஆண்டுகள் பழமையான 36 பனை மரங்களையும் வேரோடு தோண்டி வீசி உள்ளனர்.



தனது வீட்டில் இருந்து தோட்டத்திற்குச் சென்ற வடிவேல் பனை மரங்கள் முழுவதுமாக வேரோடு தோண்டி வீசப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து ஆறுமுகம் மற்றும் அவரது மகன்களிடம் கேட்டபோது நாங்கள் அப்படித்தான் செய்வோம் நீ எங்கு வேண்டுமானாலும் புகார் கொடு எனப் பேசியதாக கூறப்படுகிறது.



இதுகுறித்து பல்லடம் காவல் நிலையத்தில் வடிவேல் புகார் அளித்துள்ளார். மேலும் மூன்று தலைமுறைகளாக வளர்த்து வந்த பனை மரத்தை இரவோடு இரவாக வேரோடு தோண்டி வீசி உள்ளனர் எனவும், பனை மரங்களை சேதப்படுத்தியவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பனை மரங்களை வளர்க்கவும் பாதுகாக்கவும் தமிழக அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் இரவோடு இரவாக 36 பனை மரங்கள் தோண்டி வீசப்பட்ட சம்பவம் பல்லடத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விவசாயி வடிவேல் அளித்த புகாரின் அடிப்படையில் பல்லடம் காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...