பல்லடம் அருகே லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு!

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே காரணம்பேட்டையில் கல்குவாரி கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் பொதுமக்கள், லாரி ஓட்டுநர்களுக்கு தர்பூசணி பழம், குடிநீர், மோர் வழங்கப்பட்டன.


திருப்பூர்: பல்லடம் அருகே லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காரணம்பேட்டையில் இன்று மே தினத்தை ஒட்டி கல்குவாரி கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.



கோடங்கிபாளையம் ஊராட்சி தலைவர் பழனிச்சாமி, பல்லடம் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்தனர்.



பொதுமக்களுக்கு வெயில் காலம் முடியும் வரை தர்பூசணி பழம், குளிர்ச்சியான மோர் மற்றும் குடிநீர் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்வில் லாரி உரிமையாளர்கள் மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நீர் மோர் மற்றும் பழங்களை வழங்கினர்.

Newsletter

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...