கோவை மாநகரப்பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகள் - பொதுமக்கள் அச்சம்!

கோவை மாநகரப் பகுதிக்கு உட்பட்ட உக்கடம் அல் அமீன் காலனி பகுதியில் குரங்குகள் சுற்றித்திரிவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். மாநகராட்சி நிர்வாகம் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



கோவை: கோவை உக்கடம் பகுதியில் அல் அமீன் காலனி உள்ளது. இங்கு சுமார் 1000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

அல் அமீன் காலனியில் இருந்து சுமார் 5 கிமீ தாண்டி தான் குரங்குகள் நடமாட்டம் வழக்கமாக இருக்கும்.



இந்நிலையில் தற்போது அல் அமீன் காலனி குடியிருப்பு பகுதிக்கும் குரங்குகள் வரத் துவங்கியுள்ளன. இதனால், அப்பகுதி மகக்ள் அச்சமடைந்துள்ளனர்.

இன்று காலை முதல் அப்பகுதியில் சுற்றி திரியும் குரங்குகள், அங்குள்ள மின்கம்பங்கள் மீது ஏறி அங்கும் இங்கும் தாவி வருகின்றன.



மேலும், அங்குள்ள வீடுகளுக்குள்ளும் செல்ல முயல்வதால் அப்பகுதியில் உள்ள மக்கள் வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடிக்கொண்டு வீடுகளுக்கு உள்ளேயே தஞ்சமடைந்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, அப்பகுதியில் உள்ள மளிகைக்கடை, பழக்கடை வியாபாரிகளும் குரங்குகளின் அட்டகாசத்தால் அச்சமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் சிலர் குரங்குகளை விரட்டும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதே சமயம் மாநகராட்சி நிர்வாகமும் குரங்குகளை பிடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...