கோவையில் 1000ம் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் போராட்டம், வங்கி சேவை பாதிப்பு.


நிதிதுறை சீர்திருத்தங்கள் என்ற பெயரில் மத்திய அரசு வங்கி ஊழியர்களின் நலனுக்கு எதிராக தொழிலாளர் நல சட்டங்களை மத்திய அரசு கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பகுதியாக வங்கி ஊழியர் சங்களின் கூட்டமைப்பு சார்பில் கடந்த மாதம் பிப்ரவரி 28ல் ஒரு நாள் வேலை நிறுத்தம் நடத்த முடிவு எடுக்கபட்டது. இன்று ஒரு நாள் அகில இந்திய வேலை நிறுத்த்தில் வங்கி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். கோவை ரயில் நிலையம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டதில் கோவையில் உள்ள அனைத்து வங்கிகளை சேர்ந்த 1000ம் மேற்பட்டோர் இன்று போராட்டதில் ஈடுபட்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இது குறித்து வங்கி ஊழியர் கூட்டமைப்பின் தலைவர் ராஜன் கூறும்போது வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், ஓய்வூதிய பலனுக்கு வருமான வரி முற்றிலுமாக விலக்கு அளிக்க வேண்டும், உயிர் நீத்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு உடனடியாக நடைமுறைபடுத்த வேண்டும் என்றார். மத்திய அரசு வங்கிகளை தனியார் மையமாகும் கொள்கையை கைவிடா விட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபடு போவதாக தெரிவித்தார். இன்று ஒரு நாள் வங்கி ஊழியர்களின் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தால் கோவையில் 200 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கபட்டுள்ளது.

Newsletter

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...