கோவையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிதாக ரவுண்டானாக்கள்..! - காவல் ஆணையர் தகவல்

கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை ஆராய்ந்து ஏற்கனவே இருந்த 32 சிக்னல்கள் அப்புறப்படுத்தப்பட்டு அங்கு ரவுண்டானாக்கள் அமைத்துள்ளதாக மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகரில் தேவைப்படும் இடங்களில் புதிதாக நவீன சிக்னல்கள் அமைக்கப்பட்டு வருவதாக காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவை செல்வபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய நவீன வகை போக்குவரத்து சிக்னலை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

சிக்னல் கம்பம் முழுவதும் டிஜிட்டல் மயத்தில் ரிமோட் கண்ட்ரோல் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள சிக்னலை துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கோவை மாநகரில் ஏற்கனவே 62 போக்குவரத்து சிக்னல்கள் இருந்த நிலையில் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு முழுவதும் ஆராய்ந்து 32 சிக்னல்கள் அப்புறப்படுத்தப்பட்டு அங்கு ரவுண்டானாக்கள் அமைத்து போக்குவரத்து சீரமைக்கப்பட்டு வருகிறது.

தேவைப்படும் இடங்களில் புதிய நவீன சிக்னல்கள் அமைக்கப்பட்டு வருகிறது. சிக்னல்கள் அப்புறப்படுத்தப்பட்டு ரவுண்டானாக்கள் அமைத்துள்ள நிலையில், போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் குறைந்திருப்பதாகவும், அதிவேகமாக இயக்கப்படும் வாகனங்கள் தொடர்பாக பொதுமக்களே நேரடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கோ அல்லது சமூக ஊடகங்கள் மூலமாகவோ புகார் அளிக்கலாம்.

இது போல பல்வேறு புகார்களுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மாநகர பகுதிகளில் தனியார் பேருந்துகள் அதிவேகத்தில் இயக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. அது போன்று அதிவேகமாக பேருந்துகள் இயக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Newsletter

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...

கோவையில் வேகமாக பரவும் 'Madras Eye' நோய்: மக்கள் அலெர்ட்டாக இருக்க டாக்டர்கள் எச்சரிக்கை

கோவையில் 'Madras Eye' நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளொன்றுக்கு 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற...

குமரகுரு கல்வி நிறுவனங்களில் 1,675 மாணவர்களுக்கு ₹1.6 கோடி மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப்

குமரகுரு கல்வி நிறுவனங்களில் இன்று மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப் விழா நடைபெற்றது. கல்வி, விளையாட்டு மற்றும் NCC ஆகிய...