தூத்துக்குடியில் கிராமநிர்வாக அலுவலர் கொலைக்கு கண்டனம் - பொள்ளாச்சியில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் மணல் கொள்ளையைத் தட்டிக்கேட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து பொள்ளாச்சியில் கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் முறப்பநாடு கோவில் பத்து என்ற கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தவர் லூர்து பிரான்ஸ்.

இவர் மணல் கொள்ளைக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததால் ஆத்திரமடைந்த மணல் கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள், நேற்று கிராம நிர்வாக அலுவலகத்திற்குள் புகுந்து லூர்துபிரான்ஸை வெட்டிப் படுகொலை செய்தனர்.



இந்த சம்பவத்தை கண்டித்தும் கிராம நிர்வாக அலுவலரை கொலை செய்த நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பொள்ளாச்சி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் முன்னாள் மாவட்ட தலைவர் பிரஸ்நவ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



அப்போது கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும்,கிராம நிர்வாக அலுவலர் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.



மேலும், அரசாங்க சொத்தை காப்பாற்றுவதற்கு அனைத்து நிலை அதிகாரிகளுக்கும் பொறுப்பு உள்ளது. தவறு நடந்தால் கிராம நிர்வாக அலுவலர் மட்டுமே புகார் அளிக்க வேண்டும் என்ற நிலை உள்ளது. இதை மாற்றி வட்டாட்சியர், சார் ஆட்சியர் என்ற அளவில் புகார் அளிக்கலாம் என்ற ஒரு தீர்மானத்தை தமிழக அரசு கொண்டுவர வேண்டும் என்றும், கொலையாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Newsletter

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...

கோவையில் ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கோவை நைட்ஸ் சார்பில் ARENA ஸ்போர்ட்ஸ் மீட்

கோவை வெங்கிட்டாபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கமல்நாதன் நினைவு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தேசிய விளையாட்டு தினத்தை மு...

கோவை வார்டுகள் 12, 13-ல் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12 மற்றும் 13க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொட...