உடுமலையில் ஆன்லைன் பொருட்கள் விநியோக நிறுவனத்தில் ரூ.4 லட்சம் கொள்ளை!

உடுமலை அருகேயுள்ள எலையமுத்தூர் பிரிவில் உள்ள பாலாஜி என்பவரது ஆன்லைன் பொருட்கள் விநியோகம் செய்யும் கடையின் பூட்டை உடைத்து ரூ.4.12 லட்சம் பணம் மற்றும் சிசிடிவி காட்சிகள் பதிவாகும் ஹார்ட் டிஸ்க் ஆகியவை திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: உடுமலை அருகே ஆன்லைன் பொருட்கள் விநியோகம் செய்யும் கடையின் பூட்டை உடைத்து ரூ.4 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள குமரலிங்கம் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி. இவர் எலையமுத்தூர் பிரிவில் அரசு கலைக்கல்லூரி செல்லும் வழியில் ஆன்லைன் பொருட்களை வினியோகிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு வேலையை முடித்துக் கொண்டு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை அவர் மீண்டும் வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாலாஜி உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோவுக்குள் இருந்த ரூ. 4 லட்சத்து 12 ஆயிரம் பணம் மற்றும் சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து உடுமலை காவல்நிலையத்தி பாலாஜி புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை பதிவுகளை சேகரித்து மர்ம நபர்கள் குறித்தி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடைகள் அதிகம் இருக்கும் பகுதியில் பூட்டு உடைக்கப்பட்டு பணம் மற்றும் ஹார்ட் டிஸ்க் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் உடுமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...