தாராபுரத்தில் வருமானவரித்துறை அலுவலர் வீட்டில் நகை, பணம் கொள்ளை!

தாராபுரத்தில் வருமானவரித்துறை அலுவலர் ராஜதுரை என்பவரின் வீட்டை கள்ளச் சாவி போட்டு திறந்து ரூ 3 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், ரொக்கப்பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். விடுமுறைக்காக உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில், இந்த கொள்ளை நடந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அலங்கியம் சாலை மெட்ரோ சிட்டி அருகே உள்ள என். ஆர். எஸ் நகரில் குடும்பத்துடன் வசிப்பவர் ராஜதுரை (வயது35). தாராபுரம் விற்பனை வரித்துறை அலுவலகத்தில் உதவியாளராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தேன்மொழி (வயது32), மகன்கள் மித்திரன் (வயது7), ரண மித்திரன் (வயது4) ஆகிய இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

இந்த நிலையில் பண்டிகைக்காக மூன்று நாள் கிடைத்த விடுமுறையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தங்களது உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டனர்.



நேற்று மாலை அவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்தபோது கதவு பூட்டப்படாமல் திறந்திருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.



உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த பொருட்கள் அனைத்தும் கலைத்து எடுக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 7 சவரன் தங்க நகைகள், வீட்டிலிருந்த வெள்ளி பொருட்கள் மற்றும் பீரோவில் இருந்த ரூ 5ஆயிரம் ரொக்கப்பணம் உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் வீடு மற்றும் பீரோவின் கதவை கள்ளச்சாவி போட்டு திறந்து கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.



இந்த சம்பவம் குறித்து தாராபுரம் காவல் நிலையத்தில் ராஜதுரை புகார் செய்ததையடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், ராஜதுரையின் வீட்டை அடுத்து இருபுறமும் உள்ள முத்துலட்சுமி மற்றும் கிருபாகரன் ஆகியோரது வீடுகளிலும் கொள்ளையர்கள் புகுந்து பொருட்களை தேடி உள்ளனர். ஆனால், இரு வீட்டிலும் யாரும் இன்றி காலியாக இருந்ததால் பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை.

கொள்ளை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...