உடுமலை பேருந்து நிலையத்தில் தாய்மார் பாலூட்டும் அறையை திறக்க கோரிக்கை

உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் பூட்டி வைக்கப்பட்டுள்ள தாய்மார் பாலூட்டும் அறையை, செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை பேருந்து நிலையத்தில் மூடப்பட்டுள்ள பாலூட்டும் அறையை திறக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன் மூலமாக பல்வேறு பணிகளுக்காக நாள்தோறும் பொதுமக்கள் உடுமலைக்கு வந்து செல்கின்றனர்.

இந்த சூழலில் பச்சிளம் குழந்தைகளுக்கு பெண்கள் பாலூட்டுவதற்கு ஏதுவாக பேருந்து நிலைய வளாகத்தில் தனியாக சிறிது காலம் செயல்பட்டு வந்த அந்த பாலூட்டும் அறை பயன்பாட்டில் இல்லாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் குழந்தைகளுக்கு பாலூட்ட முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது, கிராமத்திலிருந்து உடுமலை நகருக்கு வருகின்ற பெண்கள் பல்வேறு பணிகளை முடித்துக்கொண்டு திரும்பவும் வீட்டுக்கு செல்வதற்கு மத்திய பேருந்து நிலையத்தில் காத்திருக்க வேண்டி உள்ளது. இதில் கர்ப்பிணி மற்றும் கை குழந்தையுடன் உள்ள பெண்களும் அடங்குவர்.

பிரசவத்துக்கு பின்பு சிகிச்சைக்காக பச்சிளம் குழந்தைகளை கொண்டு வரும் தாய்மார்கள் பயன்பெறும் வகையில் பாலூட்டும் அறை கடந்த 2015-ம் ஆண்டு கட்டப்பட்டது. சிறிது காலம் செயல்பாட்டிலிருந்த அந்த அறை போதிய பராமரிப்பு இல்லாமல் நகராட்சி நிர்வாகத்தால் நீண்ட காலமாக பூட்டியே வைக்கப்பட்டு உள்ளது

இதனால் கைக்குழந்தை மற்றும் பச்சிளம் குழந்தைகளுடன் உடுமலைக்கு வருகை தருகின்ற கிராமத்து பெண்கள் அவதிக்க உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து நிர்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக அந்த அறை கட்டப்பட்டதற்கான நோக்கமும் மக்களின் வரிப்பணமும் வீணாகி வருகிறது. எனவே நகராட்சி நிர்வாகத்தினர் உடுமலை பஸ் நிலையத்தில் செயல்படாமல் உள்ள பாலூட்டும் அறையை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...