12 மணி நேர வேலை சட்ட நகலை எரித்து திருப்பூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போராட்டம்!

தமிழக அரசின் 12 மணி நேர வேலை சட்ட திருத்தத்தை கண்டித்து, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், தமிழக அரசின் சட்டத்திருத்த மசோதாவின் நகலை எரித்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர்.



திருப்பூர்: தமிழக அரசின் 12 மணி நேர வேலை சட்ட திருத்தத்திற்கு எதிராக திருப்பூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மசோதா நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 21ஆம் தேதி அன்று, 8 மணி நேர வேலை என்பதை 12 மணி நேரமாக மாற்றும் சட்டத் திருத்த மசோதாவை தமிழக அரசு கொண்டு வந்தது . இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.



இந்த நிலையில் தமிழக அரசு உடனடியாக இந்த சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், மாநில செயலாளர் சிங்காரவேலன் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தமிழக அரசின் தொழிலாளர் சட்ட திருத்த மசோதா நகலை எரித்து தங்களை எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.



இதன் காரணமாக திருப்பூர் பல்லடம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...