12 மணி நேர வேலை சட்டத்தை திரும்ப பெறுக.! - கோவையில் ஏ.ஐ.டி.யூ.சி பொதுச்செயலாளர் அமர்ஜித் கவுர் வலியுறுத்தல்!

கோவை ஜீவா இல்லத்தில், ஏ.ஐ.டி.யூ.சி பொது செயலாளர் அமர்ஜித் கவுர் செய்தியாளர்களிடம் பேசியபோது, தமிழக அரசு கொண்டு வந்த 12 மணி நேர வேலை திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், இந்த சட்டத்தை கண்டித்து ஏ.ஐ.டி.யு.சி, தொடர்ந்து போராட்டம் நடத்தும் என்றார்.


கோவை: தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தியதை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என ஏஐடியூசி அகில இந்திய பொதுசெயலாளர் அமர்ஜித் கவுர் வலியுறுத்தியுள்ளார்.

கோவை ஜீவா இல்லத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. அகில இந்திய பொதுச்செயலாளரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளருமான அமர்ஜித் கவுர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,

மோடி ஆட்சியில் சமத்துவமின்மை அதிகரித்து வருகிறது.ஏழை மக்கள் தான் மொத்த சதவீதத்தில் 64.5% ஜி.எஸ்.டி., செலுத்துகின்றனர். அரசு வரி செலுத்துவோர் என சொல்லும் உயர் வகுப்பை சேர்ந்தவர்கள் 3% தான் ஜி.எஸ்.டி., செலுத்துகின்றனர். மோடி ஆட்சியில் நாடாளுமன்றமே அச்சுறுத்தலில் உள்ளது.

தொழிற்சாலை சட்டத்தை கர்நாடகாவில் ஆதரித்த பாஜக, தமிழகத்தில் எதிர்க்கிறார்கள். ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரு மாநிலங்களிலும் இந்த சட்டத்தை எதிர்ப்பதாகவும் தொடர்ந்து இந்த சட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கும்.

தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தியதை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும். ஏ.ஐ.டி.யு.சி, தொடர்ந்து இந்த சட்டத்தை கண்டித்து போராட்டம் நடத்தும்.தொழிலாளர்கள் பக்கமே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், ஏ.ஐ.டி.யு.சி யும் நிற்கும்.

மத்திய அரசின் அழுத்தம் காரணமாக தொழிற்சாலை சட்டம் நிறைவேற்றப்பட்டதா என்ற கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் தான் பதில் சொல்ல வேண்டும். அதுபோன்ற அழுத்தம் இருந்தாலும், ஸ்டாலின் தனது மக்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் பக்கம் தான் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...