கோவையில் 500 கிலோ ரம்ஜான் பிரியாணி விருந்து - 3000 பேருக்கு வழங்கிய இஸ்லாமியர்கள்!

கோவையில் ரம்ஜான் பண்டிகையொட்டி, 500 கிலோ அரிசி 500 கிலோ சிக்கனைக் கொண்டு பிரம்மாண்ட "ரம்ஜான் பிரியாணி" விருந்து தயாரிக்கப்பட்டது. இதை கிரீன் கார்டன் பகுதியில் குடியிருக்கும் 3000க்கும் மேற்பட்ட மக்களுக்கு இஸ்லாமியர்கள் வழங்கினர்.



கோவை: இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதிகாலையில் பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகைகள் மேற்கொள்ளப்பட்டு புத்தாடைகள் அணிந்து ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கின்றனர். கோவையிலும் பல்வேறு இடங்களில் ரம்ஜான் தொழுகைகள் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டது.

இதனை அடுத்து ரம்ஜான் பண்டிகையில் இஸ்லாமியர்களின் சிறப்பு உணவாக கருதப்படும் பிரியாணியை உறவினர்களுக்கும் அக்கம் பக்கத்தினருக்கும் வழங்கி ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம்.

அதன்படி, கோவை வின்சென்ட் சாலையில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள கிரீன் கார்டன் வளாகத்தில் ஆண்டுதோறும் ரம்ஜான் பிரியாணி செய்து அனைவருக்கும் வழங்கி, ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமியர்கள் கொண்டாடுவர்.



இங்கு வசிக்கும் அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களும் முன்வந்து ரம்ஜான் பிரியாணி விருந்தை தயார் செய்வார்கள்.

அந்த வகையில், இந்த ஆண்டும் சிறப்பான முறையில் பிரியாணி தயாரிக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கி, கிரீன் கார்டன் குடியிருப்போர் நல சங்கத்தினர் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.



இந்த ஆண்டு 500 கிலோ அரிசியில் 500 கிலோ சிக்கன் சேர்த்து சுமார் 3000 பேருக்கும்மேல் வழங்கும் வகையில் பிரியாணி தயார் செய்து அனைவருக்கும் வழங்கி, ரம்ஜானை கொண்டாடி வருகின்றனர்.

இந்த பிரியாணி விருந்திற்கான ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள் முத்தப்பா, பிஎச் முபாரக், நச்சுமுதீன், அர்ஷத் முகமது, அசாருதீன், சபிக் ரஹ்மாம், ஆகியோர் செய்திருந்தனர்.

Newsletter

கோவையில் 4 பேர் கும்பல் தாக்கிய தொழிலாளி உயிரிழப்பு; கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே 4 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் 3 நாட்களாக தீவிர சிக...

12 மணி நேர பணிச்சுமை: திருமலையம்பாளையம் பேரூராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப்பணியாளர்கள் போராட்டம்

கோவை திருமலையம்பாளையம் பேரூராட்சியில் தூய்மைப்பணியாளர்களை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை என 12 மணி நேரம் பணியாற்ற வேண்ட...

கோவையில் டயர் வெடித்து நடுரோட்டில் கவிழ்ந்த லாரி - சாலையில் சிதறிய தேங்காய்கள்

கோவை உக்கடத்தில் இருந்து கரும்புக்கடை நோக்கி தேங்காய் லோடு ஏற்றிச் சென்ற ஈச்சர் லாரி, டயர் வெடித்ததில் ஓட்டுநரின் கட்டுப...

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...