ரமலான் பண்டிகை கொண்டாட்டம் - கோவையில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை!

ரமலான் பண்டிகையையொட்டி கோவையில் உள்ள மசூதிகளில் நடந்த சிறப்பு தொழுகையில் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். புத்தாடை அணிந்து, ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி ரமலான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.


கோவை: கோவையில் ரமலான் பண்டிகையை ஒட்டி குழந்தைகள், பெரியவர்கள் என புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். ஆண்டுதோறும் வரும் மற்ற மாதங்களைக் காட்டிலும், ரமலான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது.

இந்த மாதம் இறைவனை நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் இஸ்லாமியர்கள் கருதுகின்றனர்.

நன்மை, தீமைகளைப் பிரித்து அறிவிக்கும் குர்ஆன் உலகிற்கு இறைவனால் வழங்கப்பட்டதும் இந்த மாதம் என்பதால், இந்த மாதம் முழுவதும் நோன்பு இருந்து நாடு முழுவதும் ரமலான் பண்டிகையினை இஸ்லாமியர்கள் கொண்டாடுகின்றனர்.



அந்த வகையில், புனித ரமலான் தினமான இன்று கோவை உக்கடம் பகுதியில் ரோஸ் கார்டன் நண்பர்கள் சார்பில் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டது.



முகமது உசேன் தலைமையில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் 500க்கும் குழந்தைகள், பெரியவர்கள் கலந்து கொண்டனர்.



புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி ரமலான் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.



இதேபோல், கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்ற ரமலான் பண்டிகை சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் டயர் வெடித்து நடுரோட்டில் கவிழ்ந்த லாரி - சாலையில் சிதறிய தேங்காய்கள்

கோவை உக்கடத்தில் இருந்து கரும்புக்கடை நோக்கி தேங்காய் லோடு ஏற்றிச் சென்ற ஈச்சர் லாரி, டயர் வெடித்ததில் ஓட்டுநரின் கட்டுப...

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...

மசக்காளிபாளையம் நகராட்சிப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் முதலிடம்

கோயம்புத்தூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஒற்றையர் மற்று...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் பொள்ளாச்சி பிரதான சாலையில் முட்புதர் அகற்றும் பணி

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 98ல் பொள்ளாச்சி பிரதான சாலை எல்ஐசி காலனி பகுதியில் சாலையோர செடிகள் மற்றும் முட...