உடுமலை அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை தாமதம்!

அமராவதி சர்க்கரை ஆலையின் பராமரிப்புப்பணிகளும் உரிய நேரத்தில் முடியாமல் இழுபறியாகவே நீடிக்கிறது. இதனால் அரவை தொடங்குவதற்கு ஒரு மாதத்துக்கு மேல் தாமதமாகிறது. உரிய பருவத்தில் கரும்பு அறுவடை செய்யப்படாததால் விவசாயிகளுக்கு கடும் இழப்பு ஏற்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: அமராவதி சர்க்கரை ஆலையில் அரவை காலம் தொடங்கியும், அரவை தாமதமாவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலைக்கு உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், நெய்க்காரப்பட்டி, ஓட்டன்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் ஒப்பந்த அடிப்படையில் கரும்பு வழங்கி வருகிறார்கள். ஆனால் சமீப காலங்களாக கரும்பு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் குறைந்து வருகிறது.



அதற்கு அமராவதி சர்க்கரை ஆலை சரிவர செயல்படாததும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. பழமையான எந்திரங்கள் முறையாக பராமரிக்கப்படாத நிலையில் கடந்த ஆண்டு அரவையின் போது பலமுறை பழுது ஏற்பட்டது. இதனால் நிர்வாகத்துக்கும் விவசாயிகளுக்கும் இழப்பு ஏற்பட்டது. எனவே நடப்பு ஆண்டில் பழுதில்லாத வகையில் முழுமையாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.



இதனையடுத்து ரூ.10 கோடி செலவில் ஆலையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகள் உரிய நேரத்தில் முடியாமல் இழுபறியாக நீடித்து வந்த நிலையில் கடந்த 10-ந்தேதி இளஞ்சூடு ஏற்றும் விழா நடைபெற்றது. மேலும் 17-ந் தேதிக்குள் பராமரிப்புப் பணிகளை முடித்து சோதனை ஓட்டம் நடத்தவும், இன்று (வெள்ளிக்கிழமை) அரவை தொடங்கவும் திட்டமிடப்பட்டது. ஆனால் இதுவரை பணிகள் முடியாமல் இழுபறியாக நீடித்து வருகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

சர்க்கரை ஆலை மீது விவசாயிகளின் நம்பிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இதற்கு முன் பணியாற்றிய, ஆலையின் மேலாண்மை இயக்குனர் விவசாயிகளிடம் நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக பல நடவடிக்கைகள் மேற்கொண்டார். இதனாலேயே 2,184 ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டது. எனவே அரவைப் பருவம் வரை அவர் பணியில் நீடிக்க வேண்டும் என்று விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால் விவசாயிகளின் கோரிக்கையை கண்டுகொள்ளாமல் புதிய மேலாண்மை இயக்குனர் நியமிக்கப்பட்டார். அவருக்கு ஆலையின் நிலை குறித்து அறிந்து கொள்வதற்கு போதிய அவகாசம் இல்லாத நிலையில் அரவைப் பருவம் தொடங்கி விட்டது. மேலும் ஆலையின் பராமரிப்புப்பணிகளும் உரிய நேரத்தில் முடியாமல் இழுபறியாகவே நீடிக்கிறது.

இதனால் அரவை தொடங்குவதற்கு ஒரு மாதத்துக்கு மேல் தாமதமாகிறது. உரிய பருவத்தில் கரும்பு அறுவடை செய்யப்படாததால் விவசாயிகளுக்கு கடும் இழப்பு ஏற்படும். இதே நிலை நீடித்தால் வரும் காலங்களில் அமராவதி சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஒப்பந்தம் செய்ய விவசாயிகள் முன்வர மாட்டார்கள். இதனால் ஆலையை மூடும் நிலை ஏற்படும். எனவே முழுமையாக நிதி ஒதுக்கி ஆலையை நவீனப்படுத்தி, பழுதில்லாமல் உரிய பருவத்தில் முழுமையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...