ஜவுளி உற்பத்தியில் அதிகரிக்கும் செயற்கை நூலிழை பயன்பாடு - பருத்திக்கான மவுசு குறைவதாக தொழில்துறையினர் வருத்தம்

ஜவுளி உற்பத்தியில் பருத்திக்கு மாற்றாக செயற்கை நூல் இழை பயன்பாடு அதிகரித்து வருகிறது. இது இந்தியாவின் அடையாளமான பருத்தி ஜவுளித்தொழிலின் எதிர்கால வளர்ச்சிக்கு நல்லதல்ல என தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: பருத்தியை முக்கிய மூலப்பொருளாக கொண்டு இயங்கும் இந்திய ஜவுளித்தொழில் அதன் விலை மற்றும் சந்தையில் நிலவும் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளது.

ஒருபுறம் நிலைமையை சமாளிக்க வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு விதிக்கப்படும் 11 சதவீத இறக்குமதி வரியை ரத்து செய்ய தொழில்துறையினர் வலியுறுத்தி வரும் நிலையில், மறுபுறம் விலை குறைந்த ஆடைகளை தயாரிக்க ரீடெய்ல் நிறுவனங்கள் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு அறிவுரை வழங்கிவருகின்றன.

இதனால், ஜவுளி உற்பத்தியில் தற்போது பருத்திக்கு மாற்றாக செயற்கைஇழை பயன்பாடு அதிகரித்துள்ளது.



இது குறித்து இந்திய ஜவுளித்தொழில்முனைவோர் கூட்டமைப்பின்(ஐடிஎப்) கன்வீனர் பிரபு தாமோதரன் கூறுகையில், பருத்தி விலை அதிகரித்துள்ளதால் இந்திய ஜவுளி உற்பத்தியாளர்கள் பல்வேறு ஆடை ரகங்களை தயாரிக்க செயற்கைஇழைகளை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். பணவீக்கத்தால் சில்லரை விற்பனை பாதிக்கப்படுகிறது.

இதனால் விலை குறைந்த பிராண்டட் ஆடைகளை தயாரிக்க ரீடெய்ல் நிறுவனங்கள் ஜவுளி உற்பத்தியாளர்களை அறிவுறுத்தி வருகின்றன. விளையாட்டுதுறையில் பயன்படுத்தப்படும் பல்வேறு ஆடைகள் தயாரிப்பிலும் ‘பாலியெஸ்டர் பிலெமென்ட்’ பயன்படுத்தப்படுகிறது. இந்த காரணங்களால் பருத்தி பயன்பாடு நூற்பாலைகளில் குறைந்து வருகிறது, என்றார்.



இதேபால், தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம்(சிஸ்பா) கவுரவ செயலாளர் ஜெகதீஷ் சந்திரன், பருத்தி கொண்டு தயாரிக்கப்படும் ஒரு பனியன் விலை ரூ.55 மட்டுமே. சந்தையில் ரூ. 250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. விளம்பர கட்டணம் உள்ளிட்டவையே இதற்கு காரணம். பாலியெஸ்டர் போன்ற செயற்கை இழை கொண்டு தயாரிக்கப்படும்போது தயாரிப்பு விலை ரூ.45-ஆகவும் விற்பனை விலை ரூ.240-ஆக இருக்கும்.

பத்து ரூபாய் மட்டுமே வித்தியாசம் இருக்கும். இந்தியாவின் அடையாளம் பருத்தி. சில கார்ப்ரேட் நிறுவனங்கள் செயற்கைஇழை இறக்குமதி செய்து வினியோகிக்கின்றன. அவர்கள் லாபம் பெறுவதற்காக ரீடெய்ல் நிறுவனங்களை குறைந்த விலை ஆடைகளை தயாரிக்க அறிவுறுத்துகின்றன. இது பருத்தி ஜவுளித்தொழில் எதிர்கால வளர்ச்சிக்கு நல்லதல்ல, என்றனர்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...