தாராபுரத்தில் வைக்கோல் தீப்பிடித்து எரிந்து நாசம்

தாராபுரம் எல்.ஜி.ஜி.எஸ். காலனியை சேர்ந்த விவசாயி ஒருவர் கால்நடைகளுக்கு வைக்கோல் வாங்கி அடுக்கி வைத்திருந்தார். அந்த வைக்கோல் மதியம் திடீரென்று தீப்பிடித்து எரிந்ததில் ரு.10ஆயிரம் மதிப்பிலான வைக்கோல் எரிந்து நாசமானது.


திருப்பூர்: தாராபுரத்தில் தொழுவத்தில் வைத்திருந்த வைக்கோல் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் எல்.ஜி.ஜி.எஸ். காலனியை சேர்ந்த விவசாயி ஒருவர் கால்நடைகளுக்கு வைக்கோல் வாங்கி அடுக்கி வைத்திருந்தார். இந்த நிலையில் அந்த வைக்கோல் மதியம் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. உடனே அருகிலிருந்தவர்கள் தண்ணீர் கொண்டு வந்து வைக்கோல் மீது ஊற்றி அணைக்க முயன்றனர். அதற்குள் வைக்கோல் முழுவதும் தீயில் எரிந்து சாம்பலானது. இவற்றின் மதிப்பு ரூ.10 ஆயிரமாகும்.

அதேபோன்று சவுடேஸ்வரமன் கோவில் அருகே அமராவதி ஆற்றை ஒட்டி உள்ள முட்புதர்களில் தீப்பற்றிக் கொண்டது. உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தீயணைப்பு நிலைய வாகனம் வேறு இடத்துக்கு சென்றதால் நகராட்சி குடிநீர் லாரியில் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி தீயை அணைத்தனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...