கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு - ஆவடி ஆயுதப்படை உதவி ஆணையரிடம் சிபிசிஐடி விசாரணை

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சென்னை ஆவடி ஆயுதபடை உதவி ஆணையர் கனகராஜிடம் கோவை சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையிலான சிபிசிஐடி போலீசார் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உள்ளிட்டோருக்கு சொந்தமான எஸ்டேட் உள்ளது.

இந்த எஸ்டேட்டில் கட்டப்பட்டுள்ள பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது.

அப்போது இரவு காவலாளி ஓம் பகதூர் என்பவர் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ், கேரளாவை சார்ந்த சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்த சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட கனகராஜ் சேலம் அருகே சாலை விபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த கொலை கொள்ளை சம்பவத்தில் சயான் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து, நீலகிரி மாவட்ட போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

ஆனால், முறையாக விசாரிக்கப்படவில்லை என்று கூறி 2021 ஆம் ஆண்டு ஏ டி எஸ் பி கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தனிப்படை போலீஸ் விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார் சுமார் 316 பேரிடம் விசாரணை நடத்திய நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இறுதியில் திடீரென சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து, விசாரணை அதிகாரியாக கோவை சிபிசிஐடி ஏ.டி.எஸ்.பி முருகவேல் நியமனம் செய்யப்பட்டார். அவரது தலைமையில் 49 பேர் கொண்ட சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

குறிப்பாக சம்பவம் நடைபெற்றபோது நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த முரளி ரம்பா, கோடநாடு எஸ்டேட் பங்குதாரர் சசிகலா, எஸ்டேட் மேலாளர் நடராஜன் உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினர்.

அதன் தொடர்ச்சியாக, இன்று காலை சென்னை ஆவடி ஆயுதப்படை உதவி ஆணையராக உள்ள கனகராஜிடம் சிபிசிஐடி குழுவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

ஏ டி எஸ் பி முருகவேல் தலைமையிலான சிபிசிஐடி போலீசார் ஆவடி சிஐடி காவலர் குடியிருப்பில் உள்ள கனகராஜன் வீட்டிற்கு சென்று காலை 3 மணிநேரம் விசாரணை நடத்தி சென்றனர்.

சிபிசிஐடி போலீசார் விசாரித்த ஆயுத படை உதவி ஆணையர் கனகராஜ், இதற்கு முன்பு ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு பாதுகாப்பு அதிகாரியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...