தர்பூசணி விளைச்சல் பாதிப்பு - உடுமலை விவசாயிகள் கவலை!

திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக வெயில் காரணமாக இந்த சீசனில் தர்பூசணி விளைச்சல் குறைந்துள்ளது. கொள்முதல் விலையும் சரிந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம் சுற்றுப்பகுதியில், கோடை சீசனை இலக்காக வைத்து கிணற்று பாசனத்தில், தர்பூசணி பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது.

குறிப்பாக, மேட்டுப்பாத்தியில், நீர் ஆவியாவதை தடுக்க நிலப்போர்வை அமைத்து, விதைகளை நடவு செய்கின்றனர்.



செடிகளின் அருகிலேயே தண்ணீர் கிடைக்கும் வகையில், நுண்ணீர் பாசன முறையை பின்பற்றுகின்றனர். இதனால், ஏக்கருக்கு 20 டன் வரை தர்பூசணி விளைச்சல் கிடைத்துவருகிறது.

கொரோனா ஊரடங்கு காலத்தில், கொள்முதல் செய்ய ஆளில்லாமல், தர்பூசணி விளைநிலங்களிலேயே வீணாகி விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. நடப்பு சீசனில் தாந்தோணி, துங்காவி மற்றும் உடுமலை வட்டாரத்தில், சில பகுதிகளிலும் தர்பூசணி சாகுபடி செய்து அறுவடை தொடங்கியுள்ளது.



இது குறித்து விவசாயிகள் கூறுகையில், 'தற்போது, தர்பூசணியை கிலோ, 12 – 14 ரூபாய் வரை கொள்முதல் செய்கின்றனர். இந்த விலை கட்டுப்படியாகாது. அதிக வெயில் உள்ளிட்ட காரணங்களால் இந்த ஆண்டு 2 டன் வரை விளைச்சல் குறைந்துவிட்டது. சாகுபடி செலவு அதிகரித்து நிலையில், விலை அதிகரித்தால் மட்டுமே நஷ்டத்தை தவிர்க்க முடியும், என்றனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...