கோவையில் ஆர்.எஸ்.எஸ் பேரணி - ஹெச்.ராஜா, அர்ஜூன்சம்பத் பங்கேற்பு!

கோவையில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் சீருடை பேரணியில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன்சம்பத் உட்பட ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர், பாஜக, இந்து முன்னனி, இந்து மக்கள் கட்சி என சங்பரிவார் அமைப்பை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


கோவை: நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து, கோவையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சீருடை பேரணி நடைபெற்றது.

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து.



கோவையில் இன்று மாலை மாபெரும் பேரணி நடைபெற்றது.

சத்ரபதி வீரசிவாஜியின் 350ஆவது முடிசூட்டிய விழா, அம்பேத்கர் பிறந்தநாள் விழா, வள்ளலாரின் 200வது ஜெயந்தி விழா என முப்பெரும் விழாவாக நடத்தப்பட்ட பேரணியில் பா.ஜ.க மூத்த தலைவர் எச். ராஜாவும், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் ஆகியோர் கலந்துகொண்டு சீருடை அணிந்து ஊர்வலமாக சென்றனர்.



கோவை பொன்னையராஜபுரம் பகுதியில் தொடங்கிய இந்தப் பேரணி, தியாகி குமரன் வீதி, இடையர் வீதி, தாமஸ் வீதி ஆகிய வீதிகளின் வழியாக வந்து ராஜவீதி தேர்முட்டி திடலில் நிறைவடைந்தது.



இந்த பேரணியில், சிறுவர்கள் உட்பட ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர், பாஜக, இந்து முன்னனி, இந்து மக்கள் கட்சி என சங்பரிவார் அமைப்பை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.



முன்னதாக காவி கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய பின்பு, பேண்ட் வாத்தியங்கள் முழங்க பேரணியானது தொடங்கியது.



மதவிரோத முழக்கங்கள் எழுப்பக்கூடாது, ஆயுதங்கள் கையில் ஏந்தி பேரணி செல்லக்கூடாது, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடத்த கூடாது என்பன போன்ற கட்டுப்பாடுகளை ஏற்கனவே காவல்துறையினர் விதித்திருந்த நிலையில், அதனடிப்படையில் இந்த ஊர்வலம் நடத்தப்பட்டது.



இந்தப் பேரணியின்போது, அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில், ஊர்வலப்பாதை முழுவதும் கோவை மாநகர துணை ஆணையர் சந்தீஷ் தலைமையில் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். காவி கொடியை கையில் ஏந்தி சென்ற தொண்டர்களுக்கும் பாரதமாதா, ஹெக்டேவர், கோல்வார்க்கர் போன்றோரின் உருவ படங்களுடன் வந்த வாகனத்திற்கும் வழி நெடுகிலும் திரண்டிருந்த பெண்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து பேரணியின் நிறைவில் ராஜவீதி தேர்நிலைத்திடலில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி மற்றும் வீர சாகச பயிற்சிகள் நடத்தப்பட்டு பொது கூட்டம் நடைபெற்றது. இதில், பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், மேகாலயா முன்னாள் ஆளுநர் சண்முகநாதன், பாஜக விவசாய பிரிவு மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...