ஞான நிலையை எட்டிய வயதில் மு.க.ஸ்டாலின் முதல்வராகி இருக்கிறார்..! - நடிகர் தம்பி ராமையா புகழாரம்

சிறு படம் தயாரிப்பவர்களுக்கு 7 லட்சம் ரூபாய் மானியம் என்பது காதில் தேன் வந்து பாய்வதைப் போன்றது. ஞான நிலை எட்டிய வயதில் தமிழ்நாடு முதல்வர் இருக்கிறார். அந்த ஞானத்தின் விளைவாக தமிழ்நாடு நிறைய நல்ல விஷயங்களை பார்க்கும், என்று நடிகர் தம்பி ராமையா தெரிவித்தார்.


கோவை: கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற முதல்வர் புகைப்பட கண்காட்சியின் இறுதி நாளில் நடிகர் தம்பி ராமையா பார்வையிட்டார்.

கோவை வஉசி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள 'எங்கள் முதல்வர் எங்கள் பெருமை' என்ற தமிழக முதலமைச்சரின் புகைப்பட கண்காட்சி நேற்றுடன் முடிவடைந்தது. இதில் கலந்து கொண்டு பார்வையிட்ட நடிகர் தம்பி ராமையா பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.



அப்போது அவர் பேசியதாவது:

வாழ்ந்து முடிந்தவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் புத்தகங்களில் படித்திருக்கிறோம், பிறர் சொல்ல கேட்டிருக்கிறோம், காட்சிகளாகப் பார்த்திருக்கிறோம். ஆனால் வாழும் தலைவர் ஒருவருடைய வரலாற்றைக் கண் முன்னால் பார்ப்பது என்பது மிகப்பெரிய கொடுப்பனை.

இந்த ஏழு நாட்களும் முண்டியடித்து கொண்டு இந்த காட்சியை பார்த்துச் சென்றவர்களெல்லாம் ஒரு சுகமான காட்சியைப் பார்த்ததாகத் தான் சொல்வார்கள்.

ஒரு இரவிலிருந்து விட்டு மறு இரவில் காணாமல் போவது வெற்றி அல்ல, ஒரு இடத்தில் அழுத்தம் திருத்தமாக வந்து அமர்வதற்கு மிகப்பெரிய தியாகம் இருக்க வேண்டும். கண்ணீர் விட்டிருக்க வேண்டும், துன்பங்களை அனுபவித்து இருக்க வேண்டும், குடும்பத்தை நேசிக்கின்ற ஒரு பண்பு இருக்க வேண்டும்.

இந்த கண்காட்சியை பார்க்கும்போது தமிழ்நாட்டின் உடைய முதல்வர் ஸ்டாலின் ஒரே இரவில் உருவான தலைவர் அல்ல எனத் தெரிகிறது.

இந்த கண்காட்சியின் நிறைவுப் பகுதி வரும்போது எனக்கே நிகழ்வு ஏற்படுகிறது. 1976 இல் நெருக்கடியான காலகட்டத்தில் நிறைய தலைவர்கள் எழுதிக் கொடுத்துவிட்டு விலகிச் சென்று விட்டனர், அவ்வாறு விலை கொடுத்து விட்டு விலகி சென்று இருக்கலாம். ஆனால் எழுதி கொடுக்க மறுத்ததன் விளைவு சிட்டிபாபு என்பவரது உயிர் போகிறது.

அங்கு தான் ஸ்டாலின் என்ற மகத்தான தலைவன் உருவாகிறான். அவ்வளவு சுலபத்தில் ஸ்டாலின் அந்த இடத்தில் அமரவில்லை. முத்தமிழறிஞர் கலைஞரை கைது செய்த போது அதிமுகவினரும் அழுதார்கள். அதேபோன்று கலைஞருக்கு இடம் கிடைத்து விட்டது என்ற போது தமிழகமே வந்தது.

சிறு படம் தயாரிப்பவர்களுக்கு 7 லட்சம் ரூபாய் மானியம் என்பது காதில் தேன் வந்து பாய்வதைப் போன்றது. ஞான நிலை எட்டிய வயதில் தமிழ்நாடு முதல்வர் இருக்கிறார். அந்த ஞானத்தின் விளைவாகத் தமிழ்நாடு நிறைய நல்ல விஷயங்களை பார்க்கும்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...