கோவை அரசு கல்லூரியில் அரசியல் சார் அறிவியல் துறை மன்ற விழா

கோவை அரசு கலைக்கல்லூரியில் அரசியல் சார் அறிவியல்துறை மன்றவிழா தொடங்கியுள்ளது. அதில் மாணவர்கள் உருவாக்கிய நம்பிக்கை பூங்காவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி திறந்து வைத்தார்.


கோவை: கோவை அரசு கலைக்கல்லூரியில் செயல்பட்டு வரும் அரசியல் சார் அறிவியல் துறை சார்பில் மன்ற விழா கல்லூரி வளாகத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.



இதில் மாணவர்கள் உருவாக்கிய பூங்காவில் மரக்கன்றுகள் நடவு செய்யபட்டது. இதனைத் தொடர்ந்து, கல்லூரி அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கலந்துக் கொண்டார்.



பின்னர் அவர் மாணவர்களிடையே பேசுகையில், மாணவர்கள் அனைவரும் குறிக்கோளை நோக்கியே பயணிக்க வேண்டும். வரும் காலங்களில் மத்திய மாநில அரசுகளில் வேலை வாய்ப்புகள் உருவாக உள்ளது. கல்லூரி வாழ்க்கையில் உங்கள் தனித்திறனை வளர்த்துக் கொள்வது அவசியம்.

இங்கு கற்றுக்கொள்ளும் தனித்திறமைகள் உங்கள் வாழ்வில் நிச்சயம் உதவும், என்றார்.

பின்னர் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழாவில் கல்லூரி முதல்வர் உலகி, அரசியல் சார் அறிவியல் துறை தலைவர் கனகராஜ், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...