கோவை வனச்சரகத்தில் வனவிலங்குகள் தாகம் தணிக்க வனத்துறையினர் தீவிரம்!

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில், கோடைக்காலம் காரணமாக ஏற்படும் வறட்சியை சமாளிக்க வனத்துறை சார்பில் தண்ணீர் தொட்டிகள் அமைத்து, தண்ணீர் நிரப்பப்பட்டு வருவதால், தண்ணீர், உணவுத் தேடி யானை உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் வருவது குறைந்துள்ளது.


கோவை: மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் வனவிலங்குகள் தாகத்தைத் தணிக்கும் வகையில், தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டம் மேற்கு மலைத்தொடர்ச்சி அடிவார பகுதியில் மருதமலை , ஓணாப்பாளையம், அட்டுக்கல், வெள்ளருக்கம்பாளையம், நரசீபுரம், பூண்டி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. தற்போது கோடைக்காலம் என்பதால் போதிய மழை இன்றி வனப்பகுதியில் வறட்சியான சூழல் நிலவுகிறது.

இந்நிலையில் வனப்பகுதியில் உள்ள யானை, மயில், புள்ளி மான்கள், சிறுத்தை, காட்டுப்பன்றிகள், காட்டு மாடுகள் தாகம் தீர்க்க ஆங்காங்கே வனத்துறை சார்பில் தண்ணீர் தொட்டிகள் அமைத்து அவற்றில் சோலார் மூலம் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக யானைகள் ஒன்று கூடும் இடமான யானை மடுவு உள்ளிட்ட 2இடங்களில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு எப்போதும் தண்ணீர் இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவ்வப்போது தொட்டிகளை பார்வையிட்டு நீர் நிரப்ப ஊழியர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும் நோய் எதிர்ப்பு சக்திக்காக உப்புக்கட்டிகளும் அருகில் வைக்கப்பட்டுள்ளது. கோவை வனத்துறை சார்பில் கோடைக்காலத்தில் மேற்கொண்டு வரும் நடவடிக்கையால் இரவு நேரங்களில் தண்ணீருக்காக ஊருக்குள் வன விலங்குகள் புகுவது தற்போது குறைந்து உள்ளது.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...