மேட்டுப்பாளையத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க மண் பரிசோதனை!

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் கட்டப்பட்டு 39 ஆண்டுகள் கடந்துவிட்டதால், அதை இடித்துவிட்டு, புதிய பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அதிகாரிகள் மண் பரிசோதனை மேற்கொண்டனர்.


கோவை: மேட்டுப்பாளையத்தில் பேருந்து நிலையம் அமைக்க அதிகாரிகள் மண் பரிசோதனை செய்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் கடந்த 1984ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இங்கிருந்து கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பேருந்துகள் வந்து செல்கின்றன.

அதேபோல் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், திருச்சி, கரூர், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த பேருந்து நிலையத்தில் மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாக கடைகளும் இயங்கி வருகின்றன. நாள்தோறும் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தைப் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது அன்றாட பணிக்காகவும், வேலைக்கு செல்வோரும், மாணவ,மாணவிகளும் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட உள்நாடுகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மேட்டுப்பாளையம் வந்தடைந்த, பின்னர் மலைகளின் அரசி ஊட்டிக்கு சென்று வருகின்றனர்.

இந்தநிலையில் பேருந்து நிலையம் கட்டப்பட்டு சுமார் 39 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் கட்டிடத்தின் பல பகுதிகள் விரிசல் அடைந்தும், சிதிலமடைந்தும்,மேல் பூச்சுகள் இல்லாமல் பொலிவு இழந்தும் காணப்படுகிறது.

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தை புனரமைக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுநல அமைப்புகளும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதனையடுத்து தமிழக அரசு மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தைப் புனரமைக்க உத்தரவிட்டது.

முதற்கட்டமாக மண் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதனையொட்டி நேற்று திருப்பூர், கோவை பேருந்துகள் நிற்கும் இடங்களில் மண் பரிசோதனை ஆலோசகர்களால் மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையர் வினோத் கூறுகையில், பேருந்து நிலையத்தை புனரமைக்கும் வகையில், முதற்கட்டமாக மண் பரிசோதனை ஆலோசகர்களால், மண் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அந்த அறிக்கையினை ஆய்வு செய்த பின்னர் பணி தொடங்கும் எனத் தெரிவித்தார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...