மோடியின் ஈஷா வருகையை எதிர்த்து கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு அமைப்பைச் சேர்தோர் கோவையில் கைது

நதிநீர் விவகாரத்தில் தமிழகத்தை கண்டும்காணாமல் செயல்படும் மத்திய அரசைக் கண்டித்தும், வன ஆக்கிரமிப்பு அமைப்பான ஈஷாவின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரதமரை கண்டித்தும் கோவையில் கருப்பு கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட 250-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.



பவானி ஆறு தடுப்பணை தடுப்பு போராட்டக் குழுவின் சார்பில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கம், விடுதலை சிறுத்தைகள், தமிழ்மாநில காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ உள்ளிட்ட 11  அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரதமர் மோடியை கண்டித்தும், மத்திய அரசின் தமிழக விரோத செயல்களைக் கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



தொடர்ந்து திடீரென ஆர்பாட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் கூறும்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதின் மூலம் மத்திய அரசு தமிழகத்திடம் பாராமுகமாக செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.

மேலும், பிரதமர் கலந்து கொள்ளும் ஈஷா விழாவிற்காக வன விலங்குகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த குழு அமைக்கப்பட்டிருப்பதின் மூலம் அங்கு விலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதி என்பது உறுதியாவதாகவும் தெரிவித்தார். 

இத்தகைய சட்ட அத்துமீறல் சம்பவங்களில் ஈடுபட்டு வரும் ஈஷாவின் நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொள்வதை கண்டித்து இப்போராட்டம் நடத்தப்படுவதாகவும் கு.ராமகிருட்டிணன் அப்போது தெரிவித்தார்.

Newsletter

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...