தேசிய நிலஅளவை தினம் - கோவையில் புகைப்படக் கண்காட்சி!

தேசிய நில அளவை தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை ஆட்சியர் கிராந்திகுமார் பாடி திறந்துவைத்தார். பழங்காலங்களில் பயன்படுத்தப்பட்ட நில அளவை கருவிகள், பெண்டாகிராம் கருவி, கம்ப்யூட்டிங் ஸ்கேல் கருவிகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.



கோவை: தேசிய நில அளவை தினத்தை ஒட்டி கோவையில் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.

இந்திய நில அளவை துறையின் பிதாமகன் என அழைக்கப்படும் வில்லியம் லாம்டன் கடந்த 10.04.1802-ம் ஆண்டு சென்னை புனித தோமையர் மலையில் நில அளவை பணிகளை தொடங்கினார்.



அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10-ம் தேதி தேசிய நில அளவை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட நில அளவைகள் துறை சார்பில் புகைப்பட கண்காட்சி இன்று தொடங்கியது. இதனை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்தார்.



இந்த கண்காட்சியில், பழங்காலங்களில் பயன்படுத்தப்பட்ட நில அளவை கருவிகள், வரைபடங்களை பெரிதாகவும், சிறிதாகவும் காண்பிக்கக்கூடிய பெண்டாகிராம் கருவி, பரப்பளவை அளக்கும் கம்ப்யூட்டிங் ஸ்கேல் கருவிகள், இணை கோடுகளை சரியாக வரைவதற்கு பயன்படும் பேரலால் ரூர்ல்ஸ் கருவிகள் உள்பட பல்வேறு கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதனை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...