உடுமலை - தளி சாலையில் போக்குவரத்து நெரிசல்: தீர்வு காணப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்ப்பு!

உடுமலை - தளி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் அதன் இரு புறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும், ஏற்கனவே இருந்தது போன்று ஒரு வழி பாதையாக மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.


திருப்பூர்: உடுமலை - தளி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள தளி சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வரும் நிலையில், அதற்கு தீர்வு காணப்படுமா? என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.



உடுமலை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள தளி சாலை பிரதான சாலையாக உள்ளது. இந்த சாலையை திருமூர்த்தி மலை, அமராவதி, மூணாறுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் சுற்றுப்புற கிராமங்கள் மற்றும் நகராட்சியை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக எந்த நேரமும் முக்கிய சாலையான தளி சாலை வாகன நெருக்கத்துடன் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.



இதனால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் மற்றும் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது,

உடுமலை நகராட்சி பகுதியில் உள்ள பிரதான சாலைகளில் தளி சாலையின் பங்கு முக்கியமானதாகும். இதன் வழியாக சுற்றுப்புற கிராமங்கள் மற்றும் சுற்றுலா தளங்களுக்கு வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். இந்த சாலையின் குறுக்காக செல்கின்ற ரயில் பாதையின் மீது கடந்த சில வருடங்களுக்கு முன்பு மேம்பாலம் கட்டப்பட்டது.

அதற்கு முன்பு தளி சாலை ஒரு வழிப்பாதையாக இருந்தது. அப்போது பேருந்து நிலையம் மற்றும் பிற பகுதிகளில் இருந்து வருகின்ற வாகனங்கள் ராஜேந்திரா சாலை வழியாக சென்று காந்தி சதுக்கத்தை அடைந்து திருமூர்த்தி மலை உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு சென்று விடும்.

அதே போன்று நகருக்குள் நுழையும் வாகனங்கள் தளி சாலை வழியாக வந்து பொள்ளாச்சி - பழனி நெடுஞ்சாலையை அடைந்து பேருந்து நிலையத்துக்கு சென்று விடும். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் சீராக இருந்து வந்தது. ஆனால் பாலம் கட்டப்பட்ட பின்பு ஒரு வழி சாலையாக இருந்த தளி சாலை இரு வழி சாலையாக மாறிவிட்டது.

வாகன பெருக்கமும் அதிகரித்துள்ளதால், அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால் அதை செயல்படுத்த முன்வரவில்லை.

இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே தளி சாலையில் ஏற்பட்டு வருகின்ற போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு தரும் வகையில் அதன் இரு புறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அத்துடன் முன்பு இருந்தது போன்று ஒரு வழி பாதையாக மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...