கோவை- பொள்ளாச்சி சாலை விரிவாக்கத்தால் ஈச்சனாரி கோவில் பாதிக்கப்படாது என பாஜக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்


கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிகளுக்காக மத்திய அரசு 10 ஆயிரம் கோடி ஓதுக்கி இருப்பதாகவும் , இது தொடர்பாக தமிழக முதல்வரை விரைவில் சந்தித்து பேச இருப்பதாகவும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

பொள்ளாச்சி இடையேயான 4 வழிச்சாலை  அமைக்கப்பட்டு வரும் பகுதிகளை  மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை ஈச்சனாரி விநாயகர் கோவில் இந்த நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியால் பாதிக்கப்படாது எனவும்  சாலை விரிவாக்கப்பணிகளுக்காக நிலம் கையகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் மேம்பாலம் அமைக்கப்பட்டு கோவிலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் சாலை அமைக்கப்படும் என தெரிவித்தார். 

மேலும் நெடுஞ்சாலை அமைக்கும் போதே சாலையின் இரு பகுதிகளிலும் செடிகள் அமைப்பது, மரங்கள் நடுவது போன்ற  சுற்றுசூழல் பாதுகாப்பிற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் , பொள்ளாச்சி  கோவை மக்கள் நகரங்களை காப்பதில் ஆர்வத்துடன் இருப்பதால்  4 வழிச்சாலை பிரமாதமாக அமையும் எனவும் தெரிவித்தார். தமிழகத்தின் சாலை மேம்பாடு மற்றும் விரிவாக்க பணிகளுக்காக 60 ஆயிரம் கோடி ரூபாய் வரை மத்திய அரசு ஓதுக்கி இருப்பதாகவும் குறிப்பாக  கிழக்கு கடற்கரை சாலைக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் ஓதுக்கப்பட்டுள்ளதாகவும் , தமிழக முதல்வரை விரைவில் சந்தித்து கிழக்கு கடற்கரை சாலை விர்வாக்க பணிகள் தொடர்பாக பேச இருப்பதாகவும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் செய்யப்படும் போது மிக முக்கியமாக பொருளாதார சாலையாக உருவெடுக்கும் எனவும், புறந்தள்ளப்பட்ட  கிழக்கு மாவட்ட மக்கள்  வசிக்கும் பகுதிகளில் இதன் மூலம் புதிய தொழில்கள் உருவாகி அவர்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கி கொடுக்கும்  எனவும் பொன் .ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தற்போதைய முதல்வர் சாலை போக்குவரத்து துறையில் இருந்ததால் இந்த சாலை அமைவதன் பலன்கள் தெரியும் எனவும், இந்த திட்டத்திற்கு மாநில அரசு ஓத்துழைப்பு கொடுக்கவில்லை என்றால் மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு புறந்தள்ளுவதாக எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...