சீமானின் உருவ பொம்மையை எரித்து திராவிடர் தமிழர் கட்சி போராட்டம்!

அருந்ததியினர் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக்கோரி கோவையில் அவரது உருவ பொம்மையை எரித்து திராவிடர் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து கோவையில் திராவிடர் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அருந்ததியர் சமூக மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு பலத்த கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு இடங்களில் சீமானை கண்டித்து ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.



அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திராவிடர் தமிழர் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது.



இக்கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் ஆதித்தமிழன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சீமானுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.



இப்போராட்டத்தில் திடீரென சீமானின் உருவபொம்மையை எரித்து கண்டனங்களை பதிவு செய்தனர். உருவ பொம்மை எரிக்கப்பட்ட சில வினாடிகளில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் தண்ணீர் ஊற்றி அணைத்து உருவ பொம்மையை கைப்பற்றினர்.



பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

ஆதவ் அர்ஜுனாவை நீக்க வேண்டும்: கோவையில் கிருஷ்ணசாமி

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் குடும்பத்தினர் மீதா...

தங்க விலை உயர்வு: வரிச்சட்ட மாற்றம் கோரி கோவை நகை உற்பத்தியாளர்கள்

தங்க விலை உயர்வால் மூலதன நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த கோயம்புத்தூர் நகை உற்பத்தியாளர் சங்கம், வரிச்சட்ட மாற்றங்கள்...

பேரூர் டி.எஸ்.பி நடப்பயண ரோந்து; பொதுமக்களிடம் குறைகள் கேட்பு

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் பேரூர் டி.எஸ்.பி கால்நடை ரோந்து மேற்கொண்டு பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்...

கூடலூரில் அரசு பள்ளிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ சுனில் ஆனந்த்

கூடலூர் நகராட்சிக்குட்பட்ட அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட மேட்டுப்பாளையம் எம்எல்ஏ சுனில் ஆனந்த், பழுதடைந்த குடிநீர் தொட...

சரவணம்பட்டியில் கையகப்படுத்தப்பட்ட 73 வாகனங்கள்; உரிமையாளர்களுக்கு அழைப்பு

கோவை சரவணம்பட்டி காவல் நிலைய எல்லையில் கையகப்படுத்தப்பட்ட 73 இருசக்கர வாகனங்களை உரிய ஆவணங்களுடன் வந்து பெற்றுக்கொள்ள பொத...

நீலகிரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வாய்ப்பு

கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், இன்று கோவை உட்பட 10 மாவட்...