குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தனிக் கவனம்..! - கோவை எஸ்பி பத்ரிநாராயணன் பேட்டி

கோவை மாவட்டத்தில் உள்ள 357 ரவுடிகளில் 300 பேருக்கு பிணை வாரண்ட் பத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. 57 பேர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளதாக கோவை மாவட்ட எஸ்.பி.பத்ரிநாராயணன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் தவறவிட்ட சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான 101 செல்போன்கள் மீட்கப்பட்டு பொதுமக்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.



அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் மாவட்ட எஸ்.பி.பத்ரிநாராயணன் பேசியதாவது:



கடந்த ஆண்டு ஏப் 1 தேதி முதல் தற்போது வரை சுமார் ரூ.1.7 கோடி மதிப்பிலான ஆயிரம் செல்போன்கள் மீட்கப்பட்டு பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.



இதற்காக தனியாக பிரிவு அமைத்து மாவட்டம் முழுவதும் அனைத்து காவல் நிலையங்களிலும் வரும் செல்போன் மாயமான வழக்குகளை தனியாக கையாண்டு செல்போன்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

கடந்த ஒரு ஆண்டில் மாவட்டத்தில் சுமார் ரூ.1.9 கோடி மதிப்பிளான 800 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 680 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 330 பேரிடம் நன்னடைபிணை பெறப்பட்டுள்ளது, 15 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே போல கடந்த 3 மாதங்களில் 126 குற்றச்சம்பவங்கள் நடைபெற்று அதில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து சுமார் ரூ.1.7 கோடி மதிப்பிளான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை மாவட்டத்தில் நடந்த 53 கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 44 போக்ஸோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 56 போக்ஸோ வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 26 வழக்கு விசாரணையும் நடைபெற்று வருகிறது.

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பங்களை தடுக்க தனி கவனம் செலுத்தி வருகிறோம். போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கோவை மாவட்டத்தில் உள்ள 120 கல்லூரி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு தனியாக எனக்கு போதை வேண்டாம் கிளப்கள் துவங்கப்பட உள்ளன.

சைபர் கிரைம் குற்றச்சம்பங்களில் இதுவரை 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகிறோம். இதுவரை ரூ.90 லட்சம் வரை வங்கி கணக்கில் இருந்து மோசடியாக திருடப்பட்டதாக வந்த புகாரில் ரூ.60 லட்சம் மீண்டும் பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்குகளுக்கு திருப்பி பெற்றுத்தரப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள 357 ரவுடிகளில் 300 பேருக்கு பிணை வாரண்ட் பத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 57 பேர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். கேரளா கழிவுகளை கோவை மாவட்ட எல்லைகளில் கொட்டப்படுவது தொடர்பாக போலீசார் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகம் அபராதம் விதித்து வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்

Newsletter

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...