உடுமலையில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் - ராகுல்காந்தியின் பதவி பறிப்புக்கு கண்டனம்!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பைக் கண்டித்து உடுமலையில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை ரயில் நிலையம் முன்பு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ராகுல் காந்தியின் எம்.பி பதவியை பறித்த மத்திய மோடி அரசை கண்டித்து இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் மூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அநீதியானது என்றும், அதனை காரணம்காட்டி ராகுல்காந்தியை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்துள்ள ஒன்றிய அரசின் சர்வாதிகார நடவடிக்கையை கண்டித்தும் போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.



இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினரும், நலவாரியம் மாவட்ட செயலாளருமான குணசேகரன், மாவட்டத் துணைச் செயலாளர் அப்பாஸ், தமிழர் பண்பாட்டு பேரவை இணைத்தலைவர் பால் நாராயணன், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மாநில பொதுக்குழு உறுப்பினர் கோவிந்தராஜு,

மாவட்ட கவுன்சிலர் ஜனார்த்தனன், உடுமலை நகரத் தலைவர் கோ.ரவி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சதீஷ் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...

கோவை உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் பேனல்: கோடை வெயிலால் மின் உற்பத்தி இரு மடங்கு அதிகரிப்பு

கோவையில் வெயில் மிகுதியாக உள்ளதால் உக்கடம் பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் பேனல் மூலம் மின்சார உற்பத்த...

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழாவுக்கு தடை: அண்ணாமலை கண்டனம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் பங்குனி உத்திர தேர்த் திருவிழாவுக்கு பொதுப்பணித்துறை தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து...