கோவையில் மேயர் வார்டில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்!

கோவை மாநகராட்சி 19-வது வார்டுக்குட்பட்ட மணியகாரம்பாளையம், லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு 20 நாட்களாக தண்ணீர் விநியோகம் செய்யாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட மணியகாரம்பாளையம் பகுதியில் குடிநீர் வழங்காததை கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாநகராட்சி 19-வது வார்டுக்குட்பட்ட மணியகாரம்பாளையம், லட்சுமிபுரம், கணக்கன் தோட்டம், எம் கே ஜி நகர், பாலாஜி லேஅவுட், திருவள்ளுவர் நகர், வெள்ளிங்கிரி கவுண்டர் வீதி ஆகிய பகுதிகள் உள்ளன.

இந்த பகுதிக்கு கடந்த 20 நாட்களாக தண்ணீர் வரவில்லை என தெரிகிறது.



இதனால் அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கணபதி-துடியலூர் சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த சரவணம்பட்டி போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

இதனை தொடர்ந்து அவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். இருப்பினும், அவர்கள் சாலையோரம் நின்று கொண்டு, எங்கள் வார்டின் கவுன்சிலரும், கோவை மாநகராட்சி மேயருமான கல்பனா ஆனந்தகுமார் வந்து உறுதி அளித்தால் மட்டுமே நாங்கள் கலைந்து செல்வோம் என கூறி அங்கேயே நின்றனர்.

பின்னர் கோவை மாநகராட்சி குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் நாசர், தொலைபேசி மூலம் போலீசாரிடம் இன்று மாலைக்குள் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...