மேம்பால பணிக்காக கோவை-பீளமேடு கல்லூரி நடைபாதை மேம்பாலத்தை அகற்ற முடிவு!

கோவை-அவிநாசி ரோடு உப்பிலிபாளையத்தில் இருந்து சின்னியம்பாளையம் வரை சுமார் ரூ.1,610 கோடி செலவில் நான்கு வழி உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்க பணிகள் வேகமாக நடந்து வருவதால், பீளமேட்டில் பி.எஸ்.ஜி கல்லூரி அருகேயுள்ள நடைமேம்பாலத்தை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.


கோவை: பீளமேடு-அவிநாசி சாலையில் உள்ள கல்லூரி அருகேயுள்ள நடைபாதை மேம்பாலத்தை அதிகாரிகள் அகற்ற முடிவு செய்துள்ளனர்.

கோவை-அவிநாசி ரோடு உப்பிலிபாளையத்தில் இருந்து சின்னியம்பாளையம் வரை சுமார் ரூ.1,610 கோடி செலவில் நான்கு வழி உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்க பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

இதில் பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி கல்லூரியை இருபுறமும் இணைப்பதற்காகவும், மாணவ, மாணவிகள் நடந்து செல்லும் வகையில், அவினாசி ரோட்டின் குறுக்கே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபாதை மேம்பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலம் மூலம் மாணவர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் பயன்பெற்று வந்தனர்.

இந்த நிலையில் அவினாசி ரோட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதால் இந்த நடைபாதை மேம்பாலத்தினை அகற்றுவதற்கு நெடுஞ்சாலைத்துறையினர் திட்டமிட்டனர்.

அதன்படி மேம்பாலத்தின் அருகிலேயே தூண்கள் அமைக்கப்பட்டது. இதனால் இப்போது ஓடுதளம் அமைக்கும் பணிக்காக இந்த நடைபாதை மேம்பாலம் அகற்றப்படுகிறது. இந்த நடைபாதை மேம்பாலம் கோவை பீளமேட்டின் அடையாளமாகவும் விளங்கி வந்தது.

இதனால் ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகளும் பொதுமக்களும் பயன்பெற்று வந்தனர். தற்போது இந்த நடைபாலம் அகற்றப்படுவதால் அதன் முன்பு நின்று ஏராளமானோர் புகைப்படம் எடுத்து வருகின்றனர்.

இந்த மேம்பாலம் அகற்றப்படுவது குறித்து கல்லூரி மாணவ, மாணவிகள் கூறுகையில், கல்லூரியின் ஒருபுறம் இருந்து மறுபுறம் செல்வதற்கு சாலையின் குறுக்கே செல்லாமல் நேரடியாக கல்லூரியின் வகுப்புகளுக்கு நடைபாதையில் சென்று வந்தோம்.

இது எங்களின் அடையாளச் சின்னமாகவே இருந்தது. இப்போது அதனை அகற்றுவது எங்களுக்கு மிகுந்த மனவேதனை தருவதாக உள்ளதாக வேதனையுடன் தெரிவித்தனர்

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...