கோவையில் கண்டெய்னர் லாரியில் தீவிபத்து ஏற்பட்டதால் 12 டன் எடையுள்ள பஞ்சு முற்றிலும் எரிந்து சாம்பலானது .


கோவையில் ஹரியானாவிற்கு பஞ்சு ஏற்றி கிளம்பிய கண்டெய்னர் லாரியில் தீவிபத்து ஏற்பட்டதால் 12 டன் எடையுள்ள பஞ்சு முற்றிலும் எரிந்து நாசமானது.

கோவை தண்ணீர் பந்தல் பகுதியில் செயல்பட்டு வரும் விக்னேஷ் டிரேடர்ஸ் என்ற பஞ்சு நிறுவனத்திற்கு சொந்தமான பஞ்சு குடோன் செயல்பட்டு வருகிறது.



குடோனில் இருந்து 12 டன்கள் பஞ்சு ஏற்றிய கண்டெய்னர் லாரி ஒன்று இன்று மதியம் 3 மணியளவில் குடோனில் இருந்து கிளம்பி அருகில் உள்ள எடை மேடைக்கு சென்ற போது லாரியின் கண்டெய்னர் பகுதியில் புகை வருவதை அங்கிருந்தவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து உடனடியாக எடைமேடையில் இருந்து

லாரியை வெளியேற்றிய ஓட்டுனர் அதிலிருந்து கீழிறங்கி தப்பினார். 



அருகில் இருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் 2 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 3 தண்ணீர் லாரிகள் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் ஜே.சி.பி இயந்திரம் மூலம் லாரியை பிரிக்கும் பணியிலும் ஈடுபட்டனர். இதையடுத்து சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில் 12 டன் எடையுள்ள பஞ்சு முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த தீவிபத்து குறித்து பீளமேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பஞ்சு லாரியில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...