உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து மக்காச்சோளம், காய்கறிகள் சாகுபடிக்கு இறுதியாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திருப்பூர்: உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி அணை உள்ளது. இந்த அணைக்கு வனப்பகுதியில் உற்பத்தியாகும் ஆறுகள், ஓடைகள், மற்றும் பி.ஏ.பி. தொகுப்பு ஆகியவை முக்கிய நீராதாரமாக உள்ளது.



இதன் மூலமாக நீர்வரத்து ஏற்படுகிறது. அதைத் தொடர்ந்து பி.ஏ.பி. பாசன திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் சுழற்சி முறையில் 4 மண்டலங்களுக்கு தண்ணீர் விநியோகம் நடைபெற்று வருகிறது.



இதன் காரணமாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. அத்துடன் தளி வாய்க்கால் மூலமாக ஏழு குளங்களை ஆதாரமாகக் கொண்டு பாசனம் நடைபெற்று வருகிறது.

இது தவிர பூலாங்கிணர், குடிமங்கலம், மடத்துக்குளம், உடுமலை, கணக்கம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் 3ஆம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதில் 94 ஆயிரத்து 362 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன.

அதைத் தொடர்ந்து விவசாயிகள் மக்காச்சோளம் உள்ளிட்ட தானியங்கள், காய்கறிகள் சாகுபடி செய்து உள்ளனர். நீர் இருப்பு மற்றும் நீர்வரத்திற்கு ஏற்றவாறு சுழற்சி முறையில் மூன்று சுற்று தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 சுற்று தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில் தற்போது, இறுதிச் சுற்று தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



அதன்படி காலை 8 மணி நிலவரப்படி 60 அடி உயரம் கொண்ட திருமூர்த்தி அணையில் 53.15 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 823 கன அடி தண்ணீர் வந்து கொண்டு உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 147 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...