கோவையில் கஞ்சா விற்பனை: கல்லூரி மாணவர் உட்பட இருவர் கைது!

கோவை செட்டிபாளையம் அம்பாள் நகர் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த கல்லூரி மாணவர் கோகுல் (22) மற்றும் அவரது நண்பரான கோகுல் ஆகிய இருவரை கைது செய்து 1.100 கிலோ கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.


கோவை: செட்டிபாளையம் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை செட்டிபாளையம் அம்பாள் நகர் பகுதியில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடப்பதாக செட்டிபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை பிடித்து விசாரித்த போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததாக தெரிகிறது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்தனர்.

அப்போது, அவர்களிடம் சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.



விசாரணையில் பிடிபட்ட நபர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் கோகுல் (22) என்பதும், இவரது நண்பர் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கணேசன் என்பவரது மகன் கோகுல் (22) இவர் கல்லூரி மாணவர் கோகுலுடன் தங்கி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

மேலும் இவர்கள் வடமாநிலத்திலிருந்து ரயில் மூலம் கஞ்சாவை வாங்கி வந்து செட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களை குறி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 1.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

வீடு திரும்பினார் வானதி சீனிவாசன்..!

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்...

கரூர் தேர்தல் களத்தில் பரபரப்பு: செந்தில் பாலாஜி ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு..!

கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களுக்கு சொந்தமான 7 இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று கா...

“எடப்பாடி சொல்வது போல யாருடைய காலிலும் விழுந்த அனுபவம் எனக்கு இல்லை” - காங்கேயத்தில் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு..!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின...

கோவை வடக்கில் வானதிக்கு ஆதரவாக BJP மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தீவிர பரப்புரை

கோவை வடக்கு தொகுதியில் BJP வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் ஓணாம்பாளையத்தில் இன்று பரப்பு...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பிஆர்ஜி அருண்குமார் தீவிர பிரசாரம்

கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் பிஆர்ஜி அருண்குமார் பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் வீடு வீடாக சென்று பி...

கோவை தெற்கு தொகுதி: ராமநாதபுரம் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் அம்மன் கே.அர்ஜுனன் வாக்கு சேகரிப்பு

கோவை தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் கே.அர்ஜுனன் ராமநாதபுரம் வார்டு 66 உட்பட பல பகுதிகளில் வீடு வீடாகச் சென்று...