திருப்பூர் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழை - வாகன ஓட்டிகள் அவதி!

திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த பலத்த மழையின் காரணமாக குண்டும் குழியுமான சாலைகளில் சிக்கிக் கொண்ட வாகனங்கள், பொதுமக்கள் உதவியுடன் அப்புறப்படுத்தப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்த சூழ்நிலையில் திடீரென பெய்த பலத்த மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் குண்டும், குழியுமான சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றன. இதனால், அவ்வழியாகச் சென்ற வாகனங்கள் பள்ளங்களில் சிக்கிக் கொண்டன.



குறிப்பாக ஊத்துக்குளி சாலை, ரயில்வே கேட் பகுதி, அணைப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குண்டும் குழியுமான சாலைகளில் சிக்கிக்கொண்ட வாகனங்கள் அவ்வழியே வந்த சரக்கு வேன் மூலம் கயிறை கொண்டு பொதுமக்கள் உதவியுடன் அப்புறப்படுத்தப்பட்டது.



இதன் காரணமாக, ஊத்துக்குளி ரயில்வே கேட், அணைப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தின் முக்கியப் பகுதிகளில் உள்ள குண்டும் குழியுமான சாலைகளை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...