கோவையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வளர்ப்பு தந்தைக்கு ஆயுள் தண்டனை!

கோவையில் 8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வளர்ப்பு தந்தைக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது.


கோவை: கோவையில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வளர்ப்பு தந்தைக்கு அயுள்தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவையை சேர்ந்த பெண் ஒருவர் தனது முதல் கணவரை பிரிந்து, இரண்டு பெண் குழந்தைகளுடன் இரண்டாவது கணவருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் தாய் வேலைக்குச் சென்ற நேரத்தில் 8 வயது சிறுமியை மிரட்டி, அவரது வளர்ப்பு தந்தை பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதுகுறித்து சிறுமி, தாயிடம் கூறியதையடுத்து அவர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணை கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில் சிறுமியின் வளர்ப்பு தந்தை குற்றவாளி என்றும், அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் அவர் தீர்ப்பின் போது நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாததால் அவரை உடனடியாக பிடிக்க பிடிவாரன்ட் போடப்பட்டது.

Newsletter

கோவை வடக்கு: அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்கு சேகரித்த வானதி சீனிவாசனின் குடும்பத்தார்..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசனுக்காக, அவரது கணவர் சீனிவாசன் மற்றும் மகன்கள். அடுக்குமாடி குடியிருப...

பொள்ளாச்சி திமுக வேட்பாளருக்கு தேவாங்க செட்டியார் சமூகத்தினர் ஆதரவு..!

வரும் சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதச்சர்பற்ற முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளர் நித்தியானந்த...

கோவை குமரகுரு நிறுவனத்தில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி வாகனம் வருகை தந்தது. 100-க்கும் மேற்பட்ட...

ஏப்ரல் 17: கோவையில் உதயநிதி பிரச்சார அட்டவணை வெளியீடு

2026 தேர்தலை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஏப்ரல் 17ஆம் தேதி காலை முதல் இரவு வரை காங்கேயம், உடுமலைப்பேட்டை,...

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தேர்தலை முன்னிட்டு மாணவர்களுக்கு தொடர் விடுமுறை அறிவிப்பு

Coimbatore மாணவர்கள் வாக்களிக்க ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தேர்தல் நாளுக்கு முன்பும் பின்பும்...

மின் கட்டணக் குறைப்பு உள்பட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: தொழில் துறையினருக்கு அதிமுக வேட்பாளர்கள் உறுதி

கோவையில் தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு ஏற்பாட்டில் புதன்கிழமை நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில், அதிமுக கூ...