கோவை அருகே கீரணத்தத்தில் விவசாயிகள் சாலையில் பாலை ஊற்றி போராட்டம்!

புண்ணாக்கு பசும் தீவனம் மருத்துவ செலவு கடுமையாக விலை உயர்ந்துள்ளதால் தமிழக அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்ககோரி கோவை கீரணத்தம் பால் உற்பத்தியாளர்கள் பாலை சாலையில் ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: கோவை கீரணத்தம் பால் உற்பத்தியாளர்கள் பாலை சாலை ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றியம் கீரணத்தம் ஊராட்சியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம் செயல்பட்டு வருகிறது இந்த சங்கத்தில் கீரணத்தம் சுற்று வட்டார பகுதியிலிருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்நிலையில் விவசாயிகள் தங்கள் வளர்க்கும் மாடுகளில் உற்பத்தி செய்யப்படும் பாலை கொண்டு வந்து இந்த சங்கத்தில் விற்பனை செய்கின்றனர்.

அதனை இப்பகுதி உள்ள பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர். மேலும் மீதமுள்ள பாலை ஆவின் நிலையத்திற்கு அனுப்பி வைக்கின்றனர். இந்த நிலையில் பால் கொள்முதல் விலை தங்களுக்கு போதுமானதாக இல்லை.



எனவே அதனை தமிழ்நாடு அரசு உயர்த்தி தரவேண்டும் என்று கீரணத்தம்பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தில் பாலை விற்பனை செய்து வரும் விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.



தமிழக அரசின் பட்ஜெட்டில் பாலுக்கு உண்டான கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்பட எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை இந்நிலையில் பால் உற்பத்தியாளர்கள் இன்று ஒரு நாள் பாலை சங்கத்தில் ஒப்படைக்காமல் சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து போராட்டம் நடத்திய பால் உற்பத்தியாளர்கள் கூறும்போது, மாடுகளை பராமரிக்க தேவையான வேலையாட்கள் புண்ணாக்கு பசும் தீவனம் மருத்துவ செலவு உள்ளிட்டவைகள் கடுமையாக விலை உயர்ந்துள்ளதால் எங்களால் பராமரிக்க இயலவில்லை.

கூட்டுறவுச் சங்கங்களில் கொடுக்கும் பாலுக்கான கொள்முதல் விலை கட்டுப்படி ஆகவில்லை எனவே பாலின் கொள்முதல் விலையை உயர்த்தி தரவேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...

கோவையில் 5வது தென்னிந்திய குலாலர் இன அரசிதழ் அதிகாரிகள், வழக்கறிஞர்கள் கலந்தாய்வுக் கூட்டம்

கோவை செல்வபுரம் பகுதியில் 5வது தென்னிந்திய அளவிலான குலாலர் இன அரசிதழில் பதிவு பெற்ற அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்களின் க...

கோவையில் கத்திமுனையில் சமையல் மாஸ்டர், சாலையோர வியாபாரி, மெடிக்கல் பிரதிநிதியிடம் வழிப்பறி – மூவர் கைது

கோவையில் ஒரே நாளில் நடந்த மூன்று கத்திமுனை மிரட்டல் கொள்ளை சம்பவங்களில் போலீசார் மூவரை கைது செய்தனர். வடமதுரையில் மெடிக்...

கோவையில் அடுத்தடுத்து 2 பைக்குகள் திருட்டு: போலீசார் தீவிர விசாரணை

கோவை மாநகரப் பகுதியில் வீடுகளின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 பைக்குகள் அடுத்தடுத்து மர்ம நபர்களால் திருடு போயுள்ளன...