உலக தண்ணீர் தினம் - பி.என்.,பாளையம் ஒன்றியத்தில் கிராம சபைக் கூட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அசோகபுரம், குருடம்பாளையம், நஞ்சுண்டாபுரம், சோமையம்பாளையம், தடாகம், பன்னிமடை உள்ளிட்ட ஊராட்களில் உலக தண்ணீர் தினத்தை ஒட்டி சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது.


கோவை: தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவை பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் உலக தண்ணீர் தினத்தை ஒட்டி சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.



கோவை பன்னிமடை ஊராட்சியில் ஒன்றியக் கவுன்சிலர் மற்றும் ஊராட்சி கவுன்சிலர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. சோமையம்பாளையத்தில் ஊராட்சி தலைவர் ரங்கராஜ் தலைமையில் கிராமசபா கூட்டம் நடைபெற்றது.



அதேபோல் தடாகத்தில் ஊராட்சி தலைவர் சவுந்திரவடிவு ஆன்ந்தன் தலைமையிலும், நஞ்சுண்டாபுரத்தில் ஊராட்சித் தலைவர் கார்த்திகேஸ்வரி விகேவி சுந்தர்ராஜன் தலைமையிலும், குருடம்பாளையத்தில் ஊராட்சித் தலைவர் ரவி தலைமையிலும்,

அசோகபுரத்தில் ஊராட்சித் துணைத் தலைவர் சண்முகசுந்தரம் தலைமையிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.



இந்த கிராம சபைக் கூட்டங்களில் தண்ணீர் சிக்கனம் குறித்து விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...