கோவை தூய்மை பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுக.! - கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி கோரிக்கை

கோவை மாநகராட்சி முழுவதும்‌ நாளை முதல்‌ காலவரையற்ற வேலை நிறுத்தம்‌ செய்வதாக தூய்மை பணியாளர்கள்‌ அறிவித்துள்ள நிலையில்‌, அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற 26ஆவது மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி மாநகராட்சி ஆணையருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.


கோவை: காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ள தூய்மை பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற 26ஆவது மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி மாநகராட்சி ஆணையருக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாநகராட்சி முழுவதும்‌ நாளை முதல்‌ காலவரையற்ற வேலை நிறுத்தம்‌ செய்வதாக தூய்மை பணியாளர்கள்‌ அறிவித்துள்ள நிலையில்‌ தற்போது தமிழக முதல்வர்‌ வரலாறு காணாத வகையில்‌, ரூ.9,000 கோடியில்‌ மெட்ரோ ரயில்‌ திட்டம்‌, தாவரவியல்‌ பூங்கா மற்றும்‌ தகுதியுள்ள மகளிருக்கு மாதம்‌ தோறும்‌ உதவித்‌தொகை ரூ.1,000 வழங்குவது உள்ளிட்ட மிகப்பெரிய வளர்ச்சிப்‌ பணிகளை கோயமுத்தூருக்கு வழங்கி உள்ளார்.

இந்நிலையில்‌ தற்பொழுது சட்டமன்ற கூட்டத்தொடர்‌ நடைபெற்று வரும்‌ சூழ்நிலையில்‌ அனைத்து வார்டுகளிலும்‌ தூய்மைப்‌ பணியாளர்கள்‌ பற்றாக்குறை, தூய்மைப்பணிகளில்‌ தொய்வு உள்ளிட்ட சூழ்நிலைகள்‌ தான்‌ நிலவுகிறது.

இதையும்‌ தாண்டி தற்பொழுது நாளை முதல்‌ தூய்மை பணியாளர்கள்‌ கால வரையற்ற வேலை நிறுத்தம்‌ செய்ய இருப்பதால்‌ மிகப்‌ பெரிய அளவில்‌ சுகாதார சீர்கேடு ஏற்படும்‌ அபாயம்‌ உள்ளது.

ஆகவே இதை தடுக்கும்‌ வகையிலும்‌ அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்கும்‌ வகையிலும்‌ உடனடியாக அனைவரையும்‌ அழைத்துப்‌ பேசி தூய்மை பணியாளர்களின்‌ நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென மாநகராட்சி ஆணையருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...