உடுமலை ஒன்றியத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம்

உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் மாவட்ட ஆட்சியர் வினித் அறிவுறுத்தலின்படி உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.



திருப்பூர்: உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில், சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட போடிபட்டி மற்றும் சின்னவீரன்பட்டி ஊராட்சி பகுதியில் மாவட்ட ஆட்சியர் வினித் அறிவுறுத்தலின்படி உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் போடிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் செளதர்ராஜன், சின்ன வீரன் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கலாவதி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.

இந்த ஊராட்சிமன்ற சிறப்பு சபை கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவீனம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் பொது சுகாதார பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் பணிகள் விபரம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் குறித்தும், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு வறுமை குறைப்பு திட்டம் ஜல் ஜீவன் மிஷன் இயக்கம் திட்டம் குறித்தும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் திட்டம் குறித்தும் குறித்து உட்பட பல்வேறு அரசின் நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.



சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் துணைத் தலைவர் மற்றும் ஊராட்சிகள் மன்ற வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்; கிழக்கு மண்டல அலுவலகம் முற்றுகை

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் கிழக்கு...

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...