ஜீவசாந்தி அறக்கட்டளை சார்பில் அணையா அடுப்பு - கோவை கரும்புக்கடை பகுதியில் திறப்பு

ஆதரவற்ற ஏழை மக்களின் பசியை போக்கும் விதமாக ஜீவ சாந்தி அறக்கட்டளை சார்பில் கோவையில் அணையா அடுப்பு எனும் சமுதாய சமையற்கூடத்தை தமிழ்ழாடு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரஃபி திறந்து வைத்தார்.



கோவை: கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜீவசாந்தி அறக்கட்டளையினர் ஆதரவில்லாமல் உயிரிழந்த உடல்களை அடக்கம் செய்வது, இலவச ஆம்புலன்ஸ் சேவை என பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகின்றனர்.

குறிப்பாக, கொரோனா கால நேரங்களில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் சேவை பணியை செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.

இந்நிலையில், தற்போது மேலும் சேவைப்பணியில் ஈடுபடும் விதமாக அணையா அடுப்பு சமுதாய சமையற்கூடத்தை துவக்கி உள்ளனர்.



ஆதரவற்ற ஏழை எளிய மக்களின் பசியை போக்கும் விதமாக கரும்புகடை சேரன் நகர் பகுதியில் துவக்கியுள்ள இதற்கான துவக்க விழா ஜீவசாந்தி அறக்கட்டளையின் தலைவர் சலீம் தலைமையில் நடைபெற்றது.



இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரஃபி, பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தின் நிறுவனர் குருஜி சிவாத்மா, சி.எஸ்.ஐ.ஆயர் சார்லஸ் சாம்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு அணையா அடுப்பு சமையற்கூடத்தை திறந்து வைத்தனர்.



இந்நிகழ்ச்சியில் ஜீவசாந்தி அறக்கட்டளையின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...