உடுமலை சிலம்ப பயிற்சியாளருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் பாராட்டு சான்றிதழ்

உடுமலை, மடத்துக்குளம் பகுதியில் ஆதிதிராவிடர் விடுதி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு இலவசமாக தற்காப்பு கலைகளை கற்றுத்தந்த சிலம்ப பயிற்சியாளர் சி.வீரமணிக்கு ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மாணவிகளுக்கு இலவசமாக தற்காப்பு கலைகளை பயிற்சிகளை அளித்து வந்த சிலம்ப பயிற்சியாளருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

உடுமலையில் உள்ள பகத்சிங் சிலம்பம், களரி, மார்சியல் ஆர்ட்ஸ் அறக்கட்டளை ஆசானாகவும், தமிழ்நாடு களரி பைட் அசோசியேசன் மாநில செயலாளராகவும் சி.வீரமணி என்பவர் இருந்து வருகிறார்.

இவர், உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் விடுதி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் தொடர்ந்து சிலம்பம் மற்றும் களரி ஆகிய தற்காப்பு கலை பயிற்சிகளை இலவசமாக கற்று கொடுத்து வந்தார்.



இந்நிலையில், இவரது இலவச சேவையை பாராட்டி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் ரவிச்சந்திரன், காங்கேயம் தனி வட்டாட்சியர் கனிமொழி ஆகியோர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் சால்வை அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கினர்.

மாணவியர்களுக்கு சிறப்பாக இலவச சிலம்பபயிற்சி அளித்து வருவதாக பரிந்துரை செய்த தாராபுரம் மகளிர் விடுதி காப்பாளர் சாந்தகுமாரி, அலுவலக கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ஆசான் வீரமணிக்கு உடுமலை கிளை நூலகம் எண் இரண்டு நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் தலைவர் இளமுருகு, துணைத் தலைவர் சிவக்குமார், நூலக வாசகர் வட்ட ஆலோசகர் எம்பி ஐயப்பன், மகளிர் வாசகர் வட்ட தலைவர் நல்லாசிரியர் விஜயலட்சுமி, பணி நிறைவு நூலகர் கணேசன் மற்றும் நூலகர்கள் கலாவதி, மகேந்திரன், பிரமோத், அஷ்ரப், சித்திகா மற்றும் நூலக வாசகர் வட்ட உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Newsletter

சூலூர் நாகம நாயக்கன்பாளையம் குட்டையில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைக் கலக்கக் கடும் எதிர்ப்பு

கோவை சூலூர் அருகே பட்டணம் ஊராட்சிக்கு உட்பட்ட நாகம நாயக்கன் பாளையம் கிராமத்தில் உள்ள ஊராழி குட்டையை ஆழப்படுத்தவும், சுத்...

கோவை SRIT கல்லூரியில் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 தொடக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் மூன்று நாட்கள் நடைபெறும் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 (RAS 2...

மாநில காவல்துறை பணித்திறன் போட்டியில் கோவை போலீஸ் நாய்களுக்கு இரண்டாம் பரிசு

ஆவடியில் உள்ள TSP Regimental Centre (RC)-இல் 21.09.2026 முதல் 25.09.2026 வரை நடைபெற்ற மாநில அளவிலான காவல்துறை பணித்திறன்...

கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கணியூர் ஊராட்சி மற்றும...

கோவை இந்து முன்னணி சசிகுமார் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலை வழக்கில் தடை செய்யப்பட்ட PFI அமைப்பை சேர்ந்த சதாம் உசேன், சுப...

கோவையில் மாணவர்களுக்கு வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.63க்கு உட்பட்ட இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 25, 2...