பொள்ளாச்சியில் குடிநீர் வடிகால் வாரியத்தை மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டி ஊராட்சியில் முறையாக குடிநீர் விநியோகம் வழங்கப்படவில்லை என புகார் தெரிவித்து பொதுமக்கள் மகாலிங்கபுரம் குடிநீர் வடிகால்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.



கோவை: பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மாக்கினாம்பட்டி ஊராட்சியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக 20 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படுவதால் பொதுமக்கள் குடிநீரின்றி பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகிவருகின்றனர்.



இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தியடைந்த ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் செயல்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்ட குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தை முற்றியிட்டு மனு அளிக்க வந்தனர்.



இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



மாக்கினாம்பட்டி ஊராட்சிக்கு இரண்டு கூட்டு குடிநீர் திட்டங்கள் இருந்தும் குடிநீர் 20 தினங்களுக்கு ஒரு முறை மட்டுமே விநியோகம் செய்யப்படுவதால் குடிநீர் இன்றி மாக்கினாம்பட்டி ஊராட்சியில் உள்ள வைகை நகர், பாலாஜி நகர், கந்தசாமிபுரம் போன்ற பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் பொதுமக்கள் முறையிட்டு வருகின்றனர்.

ஊராட்சி நிர்வாகம் தொடர்ந்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ள பொதுமக்கள், தற்போது அளித்துள்ள மனுவின் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டங்கள் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல், சின்னாபாளையம் ஊராட்சியிலும் முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறி ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்த் குமார் தலைமையில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் புகார் மனு அளித்தனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...